இந்திய அணியின் அபார பந்துவீச்சு; 117 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா..!
In the 3rd T20 cricket match South Africa lost all their wickets for 117 runs
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ள நிலையில், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், இன்று தர்மசாலாவில் இன்று நடக்கும் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது 'டி-20' போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. இந்திய அணியில் பும்ரா மற்றும் அக்சர் படேல் நீக்கப்பட்டு, குல்தீப் மற்றும் ஹர்ஷித் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தென் ஆப்ரிக்க அணி சார்பில், போஸ்ச், நோர்ட்ஜே, ஸ்டப்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மில்லர், லிண்டே மற்றும் சிப்மலா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி ரன்களை குவிக்க முடியாமல் தொடக்கம் முதலே திணறியது. இந்திய பவுலர்கள் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் , ரீசா ஹென்ரிக்ஸ் களமிறங்கினர். தொடக்கத்தில் ரீசா ஹென்ரிக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் டி காக் 01 ரன்களிலும், பிரேவிஸ் 06 ரன்களிலும் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து வந்த ஸ்டப்ஸ் 09 ரன்களிலும், டானவன் பெரேரா 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா அணியில் மார்க்ரம் மட்டும் அரைசதமடித்து அசத்தினார். அவரும் 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப இலக்க ரன்களில் வெளியேறினர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 117 ரன்களில் சகல விக்கெட்டுகளை ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் , ராணா , வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 02 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிவரும் இந்தியா 02 ஓவர்களில் 32 ரன்களை பெற்றுள்ளது.
English Summary
In the 3rd T20 cricket match South Africa lost all their wickets for 117 runs