20 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்!....திறந்து விடுமா கர்நாடகா?....காவிரி ஒழுங்காற்று குழு பிறப்பித்த உத்தரவு என்ன? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு-கர்நாடகா இடையேயான  காவிரி நீர் பங்கீடு விவகாரம் பல ஆண்டுகளாக தொடர்ந்து பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தமிழகம் போதிய அளவு தண்ணீர் கேட்கும் பட்சத்தில், கர்நாடகா குறிப்பிட்ட அளவு மட்டுமே நிறை திறந்து விடுவதும், சில சமயங்களில் அதற்கு மறுப்பதும் வாடிக்கையாகி உள்ளது. 

இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் சில மாவட்டங்களில் காவிரி நீரை  நம்பியே பிரதான அளவு விவசாயம் செய்வதோடு, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாயும் காவிரி நீர் மூலம் தான்  விவசாயம் செய்யப்படுகிறது. 

தொடர்ந்து  இதற்காக டெல்லி சென்ற தமிழ்நாடு காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றிடம் முறையிட்டு நீதி பெற வேண்டிய சூழல் உள்ளது.  இந்த ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் பிறப்பிக்கும் உத்தரவு என்பது நீதிமன்ற உத்தரவிற்கு சமமானது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரிய நீரை மாதந்தோறும் திறந்துவிட வேண்டும் என்று, கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தி உள்ளது.  அதன்படி அக்டோபர் மாதத்திற்கான 20 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று, காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 TMC water should be provided Will Karnataka open What is the order issued by Cauvery Regulation Committee


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->