இருமல் மருந்தால் 18 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்.. மருந்து நிறுவன அதிகாரிகள் 3 பேர் கைது..!! - Seithipunal
Seithipunal


உஸ்பெகிஸ்தானில் கடந்த ஆண்டு இந்தியாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த மரியன் பயோடெக் நிறுவனத்தின் இருமல் மருந்துகளை உட்கொண்டதில் 18 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விவகாரம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கலப்பட மருந்துகளை தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் மருந்து பரிசோதனை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் இரண்டு பேர் உட்பட மரியன் பயோடெக் நிறுவனத்தின் ஐந்து அதிகாரிகள் மீது நேற்று முன்தினம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மூன்று அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மரியன் பயோடெக் நிறுவனத்தின் இயக்குனர்களாக செயல்பட்டு வந்த இருவர் தலைமறைவாக உள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மத்திய பிரதேசம் மற்றும் உத்திரபிரதேச மருந்து அதிகாரிகள் மரியன் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பு மாதிரிகளை சரி பார்த்ததில் அந்நிறுவனத்தால் தயாரிக்கப்படும் 22 மருந்துகள் கலப்படம் மற்றும் போலியானது என ஆய்வில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

18 children died due to cough syrup 3 drug company officials arrested


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->