ராஜஸ்தான் மாநிலத்தில்.. அட்சய திருதியை நாளில் 15,000 திருமணங்களுக்கு ஏற்பாடு.! - Seithipunal
Seithipunal


எந்த ஒரு புதிய தொடக்கத்திற்கு அட்சய திருதியை ஒரு நல்ல நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் அட்சய திருதியை நாளில் திருமணம் செய்வதே புனிதமாக கருதுகிறார்கள். மேலும் அட்சய திருதியை அன்று திருமணம் செய்தால் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்ற ஐதீகமும் உள்ளது.

எனவே அட்சய திருதியை நாளில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது குறிப்பாக ஒரே இடத்தில் பல ஜோடிகளுக்குத் திருமணம் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று அட்சய திருதியை நன்னாளில் சுமார் 15,000 திருமணங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் மட்டும் 3000 திருமணங்களுக்கான பந்தல்கள் முன் பதிவு செய்யப்பட்டிருப்பதாக பந்தன் அமைப்பாளர் சங்க தலைவர் ரவி ஜிண்டால் தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்தமாக என்று பதினைந்தாயிரம் திருமணங்கள் நடக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் அமல்படுத்த பட்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இது போன்ற பெரிய அளவில் திருமணங்களில் நடத்தப்படவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. இதற்கான விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

15000 marriage in rajasthan atchaya thiruthiyayai


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->