மஹாராஷ்டிரா அரசியலில் புதிய புகைச்சல்; ஏக்​நாத் ஷிண்டேவின் சிவசே​னா​வில், உத்தவ் கட்சியின் 14 எம்எல்ஏக்கள் சேர திட்டம்..? - Seithipunal
Seithipunal


மகா​ராஷ்டி​ரா​வில் கடந்த 2022-இல் சிவசேனா கட்​சி​யில் பிளவு ஏற்​பட்​ட நிலையில், ஏக்​நாத் ஷிண்டே தலை​மையி​லான அணி பாஜக கூட்​ட​ணி​யில் இணைந்​தது. தற்போது உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான அணி​யைச் சேர்ந்த 09 மக்​களவை எம்​.பி.க்​களில் 06 பேர் கடந்த சில தினங்​களுக்கு முன்பு ஷிண்டே தலைமையிலான சிவசே​னா​வில் இணைந்​தனர். இது மஹாராஷ்டிரா அரசியலில் புதிய புகைச்சலை கிளப்பியது.

கடந்த 02 நாட்களுக்கு முன்பு, சிவசேனா (உத்​தவ்), தேசி​ய​வாத காங்​கிரஸ் (சரத் பவார்), காங்​கிரஸ் கட்​சிகள் அடங்​கிய மகா விகாஸ் அகாடி கூட்​ட​ணிக் கட்சி எம்​எல்​ஏ-க்​கள் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் ​கூட்​ட​ணி​யைச் சேர்ந்த 60 எம்​எல்​ஏ.க்​களில் 37 பேர் மட்​டுமே பங்​கேற்​று கூட்டணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்​நிலை​யில், உத்​தவ் தாக்​கரே சிவசே​னாவைச் சேர்ந்த 20 எம்​எல்​ஏ-க்​களில் 14 பேர், துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்டே தலைமையி​லான சிவசே​னா​வில் இணைய உள்​ள​தாக மகாராஷ்டிர அமைச்​சரும் ஷிண்டே கட்​சி​யின் மூத்த தலைவருமான குலாப் ராவ் பாட்​டீல் தெரி​வித்​து மீண்டும் அக்கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இது குறித்து சிவசேனாவின் அமைச்​சர் உதய சமந்த் கூறுகையில், ''அப்​படிப்​பட்ட ஆபரேஷன் எது​வும் நடக்​க​வில்​லை. ஆனால் எதிர்க்​கட்சி எம்​எல்​ஏ.க்​கள் பலர் தாங்​களாகவே ஷிண்​டேவுடன் இணைய ஆர்​வம் காட்​டு​கின்​றனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

14 MLAs from Uddhavs party plan to join Eknath Shindes Shiv Sena


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->