சிவராத்திரியில் நைட் முழுதும் எங்க போன? கண்டித்த பெற்றோர்.. 60 அடி பாலத்தில் சிறுமி தற்கொலை முயற்சி.!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் 60 அடி உயர பாலத்தில் இருந்து ஒரு பெண் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் தற்கொலைக்கு முயற்சித்த சிறுமி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த சிவராத்திரி நாளில் அந்த பெண் இரவு முழுவதும் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போய் உள்ளார். அவரை காணவில்லை என்று பெற்றோர் அங்கும் இங்கும் தேடி அலைந்தார்கள். ஒரு தனியார் பேருந்தில் டிக்கெட் பரிசோதனை செய்யும் நபர் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விஷயத்தை வீட்டில் சொல்ல முடியாமல் அவர் திகைத்து வந்துள்ளார். மாணவி இரவு முழுவதும் காணாமல் போனதால் பதற்றமடைந்த பெற்றோர் அவரை சரமாரியாக திட்டியுள்ளனர். இதில் மன உளைச்சலில் இருந்தவர் தற்கொலைக்கு முயற்சித்தது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட நபரான பாபுவை சட்டத்தின் கீழ் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் போலீசார் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12 th student stay with Boy Friend in Sivarathiri and Suicide 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->