பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தைக்கு 106 ஆண்டுகள் சிறை தண்டனை..!
106 jail for father who sexually abused his daughter
பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனுக்கு 106 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த கேரளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவை சேர்ந்த ரப்பர் தொழிலாளி ஒருவரு 12 வயது மகள் இருக்கிறார். கடந்த 2017 ஆண்டு அந்த மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த சம்பவம் விசாரணை மேற்கொண்ட பொழுது தந்தையை பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் வெளிவந்துள்ளது.
இதனையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உதயகுமார் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 106 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.a
English Summary
106 jail for father who sexually abused his daughter