அடேங்கப்பா..!! கர்நாடகாவில் கடந்த 10 நாட்களில் 100 கோடி ரூபாய் பறிமுதல்..!!
100 crore seized in last 10 days in Karnataka
கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. கடந்த மார்ச் 29ஆம் தேதி முதல் கர்நாடக மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை வீதிகள் அமலில் இருந்து வருவதால் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. அதன் விளைவாக கடந்த 10 நாட்களில் மட்டும் கணக்கில் வராத ரூ.100 கோடி ரொக்கம், பரிசு பொருட்கள், 15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் 25 கோடி மதிப்பிலான வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நேற்று மட்டும் யாக்கிர் மாவட்டத்தில் 37 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று நீலமங்கலம் தொகுதியில் 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான 56 டிவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 54 ஆயிரம் லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அதன் மதிப்பு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் என கலால் வரி துறையினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
100 crore seized in last 10 days in Karnataka