பாம்பு கடித்து இறந்துபோன சிறுவன் 15 வருடம் கழித்து இளைஞனாக வந்த சம்பவம்.! ட்விஸ்ட்.!  - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலத்தில் 15 வருடங்களுக்கு முன்பு பாம்பு கடித்து இறந்ததாக கருதப்பட்ட 10 வயது சிறுவன் தற்போது இளைஞனாக உயிரோடு வந்து தனது குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை  ஏற்படுத்தியிருக்கிறது. 

உத்திரபிரதேச மாநிலம் முரசோ என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ராம் சுமர் யாதவ். 15 வருடங்களுக்கு முன்பு இவருக்கு  அங்கேஷ் யாதவ் என்ற மகன் பத்து வயதில் இருந்தான். 15 வருடங்களுக்கு முன்பு அங்கேஷ் யாதவை பாம்பு கடித்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அங்குள்ள சாமியாரிடம் கூட்டிச் சென்று இருக்கிறார் அவரது தந்தை. 

சிறுவனின் நிலைமை மோசமடையவே அதன் பின்னர் மருத்துவமனையின் உதவியை நாடியிருக்கிறார்கள். ஆனால் மருத்துவர்கள் அந்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த சிறுவனுக்கு இறுதி கிரியைகளை செய்து அவர்களது வழக்கப்படி சரயு ஆற்றில் வாழைத்தண்டில் வைத்து உடலை மிதக்க விட்டிருக்கின்றனர்.

தற்போது 15 வருடங்களுக்குப் பிறகு அந்தச் சிறுவன் இளைஞனாக தனது சொந்த ஊருக்கு திரும்பி  குடும்பத்தினருக்கும் ஊர்க்காரர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறான். இதுபற்றி கூறியிருக்கும் அங்கேஷ் யாதவ் "தனக்கு சுயநினைவு வந்து பார்த்தபோது பீகார் தலைநகர் பாட்னாவைச் சார்ந்த அமன் மாலி என்ற பாம்பு பிடிப்பவருடன் இருந்ததாக தெரிவித்துள்ளான். அந்தப் பாம்பு பிடிக்கும் நபர் தான் இந்த சிறுவனை காப்பாற்றி உயிர் பிழைக்க வைத்திருக்கிறார்.

அமன் மாலியுடன் சேர்ந்து அமிர்தசரஸ் சென்றபோது அங்கு தனது குடும்பம் மற்றும் ஆசிரியர்கள் போன்ற விவரங்களை இவர் டிரைவர்களிடம் பகிர்ந்திருக்கிறார். அதனை வைத்து ஒரு ஓட்டுநர்  அங்கேஷ் யாதவை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வந்து சேர்த்து இருக்கிறார். 15 வருடங்களுக்கு முன்பு இறந்ததாக கருதப்பட்ட மகன் உயிருடன் வந்ததை கண்ட பெற்றோர்கள் நெகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 year old boy who considered as died came back to his home town after 15 years


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->