கடந்த காலங்களில் இந்தியாவை உலுக்கிய மோசமான 10 விமான விபத்துகள்..!
10 worst plane crashes that rocked India in the past
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 என்ற விமானம் புறப்பட்ட 05 நிமிடத்தில் விமான நிலையம் அருகில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். விமானம் விழுந்த இடத்தில் இருந்த மருத்துவ கல்லூரி விடுல் இருந்த 05 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விமான விபத்தில் சிக்கிய உடல்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை
204 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. உடல் முழுவதுமாக சிதைந்த நிலையில் உள்ள உடல்களை உறவினர்களின் டி.என்.ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காண மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த காலங்களில் ஏற்பட்ட விமான விபத்துக்கள் பற்றி கீழே பார்க்கலாம். குறிப்பாக இதற்கு முன்னர் கடைசியாக 2020-இல் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் குறைந்த எண்ணிக்கையில், 21 பேர் உயிரிழந்ததோடு, இந்திய வரலாற்றில் 1996-இல் டெல்லியில் நடந்த விமான விபத்தில் 349 பேர் உயிரிழந்ததே துயரமான சம்பவமாக பதிவாகியுள்ளது.
01- கோழிக்கோடு
கேரள மாநிலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்கு உள்ளாகி ஓடுபாதையை விட்டு விலகி இரண்டு துண்டானதில், 21 பேர் உயிரிழந்தனர்.
02- மங்களூரு
கடந்த 2010-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஓடுபாதையில் விமானம் விபத்துக்குள்ளாகி பள்ளத்தில் விழுந்து உடைந்தது. இதில் 158 பேர் உயிரிழந்தனர்.
03- பாட்னா
2000-ஆம் ஆண்டு ஜூலை 17-இல் அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் போயிங் விமானம் தரையிறங்கம் போது விபத்துக்குள்ளானது. விமானியின் தவறால், கட்டுப்பாட்டை இழந்தது விபத்துக்குளானதில் 60 பேர் உயிரிழந்தனர்.
04- டில்லி
கடந்த 1996-ஆம் ஆண்டு நவம்பர் 12-இல் சவுதி அரேபியாவின் போயிங் விமானமும், கஜகஸ்தானின் விமானமும் டில்லி அருகே மோதிக் கொண்டன. இந்த விபத்து விமானிகளின் தவறு காரணமாகவும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பின் தவறான தகவல் தொடர்பாலும் நடந்த விபத்தில் 349 பேர் உயிரிழந்தனர்.
05- அவுரங்காபாத்
மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் கடந்த 1993-ஆம் ஆண்டு ஏப்ரல் 02-இல் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் விபத்துக்குள்ளானது. டிரக் மற்றும் மின்சார கம்பங்கள் மீது விமானம் மோதியதில், 55 பேர் உயிரிழந்தனர்.
06- இம்பால்
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் 1991-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-இல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 69 பேர் உயிரிழந்தனர்.
07- பெங்களூரு
கடந்த 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-இல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூரு அருகே விபத்துக்குள்ளானதில் 92 பேர் உயிரிழந்தனர்.
08- ஆமதாபாத்
ஆமதாபாத்தில் கடந்த 1988-ஆம் ஆண்டு அக்டோபர் 19-இ ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 113 பேர் உயிரிழந்தனர்.
09- மும்பை
1982-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி மும்பையில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர்.
10- மும்பை
ஏர் இந்தியாவின் போயிங் விமானம் கடந்த 1978 ஜனவரி 01-இல் மும்பையில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 213 பேர் உயிரிழந்தனர்.
English Summary
10 worst plane crashes that rocked India in the past