இந்தியாவுக்காக தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் நிதியுதவி...! - ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர்
10 lakhs financial assistance to those who died attack for India Jammu and Kashmir Chief Minister
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் இந்தியர்கள் 26 பேரை பயங்கரவாதிகள் கொடூரமாக சுட்டுக்கொன்றனர். இதைத்தொடர்ந்து, பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அறவே அழித்தது.

இதை அடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.மேலும், ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் இன்று நடத்திய தாக்குதலில், அரசு அதிகாரி உள்பட 5 பேர் பலியாகினர்.
இதில், கடந்த 4 தினங்களில் ஜம்மு காஷ்மீரில் மட்டும் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 19 பேர் அநியாயமாக கொல்லப்பட்டனர்.
உமர் அப்துல்லா:
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் 'உமர் அப்துல்லா' , ''ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்'' என்று அறிவித்துள்ளார்.
இதற்கு இணையத்தில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
English Summary
10 lakhs financial assistance to those who died attack for India Jammu and Kashmir Chief Minister