இன்றுடன் போர் நிறுத்தம் முடிவடைகிறதா...? இந்திய ராணுவ மூத்த அதிகாரி - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் 22-ந் தேதி, காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இதற்கு கடந்த 7-ந் தேதி 'ஆப்ரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம், பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்து பதிலடி கொடுத்தது.

இந்த தாக்குதலில் பாகிஸ்தானிலுள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இருநாடுகள் இடையே மோதல் அதிகரித்தது.இதில் பாகிஸ்தானும் இந்தியாவை தாக்க முயன்றது. அந்த முயற்சிகள் வேரோடு முறியடிக்கப்பட்டதோடு இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மொத்தமாக அழிக்கப்பட்டன.

அதன் பிறகு, 4 நாள் சண்டைக்கு பிறகு இருநாடுகளும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டதை அடுத்து இரு நாட்டின் எல்லையில் தற்போது அமைதி நிலவி வருகிறது.இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் இன்று முடிவடைவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர், 'இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் தொடரும்' என்று தெரிவித்தார்.

மூத்த ராணுவ அதிகாரி:

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, "டி.ஜி.எம்.ஓக்களின் (ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்) பேச்சுவார்த்தையின்போது முடிவு செய்யப்பட்ட போர் நிறுத்தத்திற்கு காலாவதி தேதி எதுவும் இல்லை.

இன்று இந்தியா- பாகிஸ்தான் டிஜிஎம்ஓக்களுக்கு இடையே எந்தப் பேச்சுவார்த்தையும் திட்டமிடப்படவில்லை" என்று தெரிவித்தார்.இது மக்களிடையே பரவி இருந்த பதற்றத்தை சற்று தனித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ceasefire ending today Senior Indian Army officer


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->