காய்ச்சலின் போது உடல் ஏன் அதிக வெப்பமாகிறது..?! - Seithipunal
Seithipunal


காய்ச்சல் :

காய்ச்சலின் போது நமது உடல் ஏன் அதிக வெப்பமாகிறது? நமது உடல் அதனை தற்காத்து கொள்வதற்கான நடவடிக்கை அது. வெளியிலிருந்து புதிய வைரஸ் ஏதேனும் ஒன்று நமது உடலுக்குள் நுழைந்தால், உடனே உடல் வெப்பமாகி அந்த வைரஸை அழிக்க முற்படுகிறது. நாம் எவ்வாறு தண்ணீரை கொதிக்க வைக்கும் போது அதில் உள்ள வைரஸ்கள் அழிகிறதோ.. அதேபோல் தான் இதுவும். இந்த செயல்பாட்டின் பொழுது நிறைய எதிர்வினைகள் (சநயஉவழைn) நடைபெறும். உடலுக்குள் சென்ற வைரஸை அழிப்பதற்கு உடல் எடுத்துக்கொள்ளும் தற்காப்பு தான் உடல் வெப்பமாதல் (காய்ச்சல்) ஆகும். இப்படி அதிகப்படியாக பதிவான வெப்பநிலை 112 டிகிரி பாரன்கீட். இதை செல்சியஸில் குறிப்பிட்டால் 46 டிகிரி செல்சியஸ்.

பாக்டீரியா :

நமது உடலில் 75 சதவீதம் பாக்டீரியாவால் ஆனது. நமது உடலில் கிட்டதட்ட 2 கிலோ பாக்டீரியாக்கள் இருக்கின்றது. விவசாயிகளுக்கு புழுக்கள் எப்படி நண்பனோ அதேபோல நமது உடலுக்கு பாக்டீரியா நண்பன். நமது ஒவ்வொரு செல்லிலும் பாக்டீரியாக்கள் இருக்கின்றன. நமது உடல் எடையில் பாக்டீரியாவிற்கு முக்கிய பங்கு உள்ளது.

காற்று :

காற்று இல்லாத ஒரு அறைக்குள் உங்களை வைத்து பூட்டினால் நீங்கள் இறந்து விடுவீர்கள். எதனால் இறப்பீர்கள் என்றால் அந்த அறையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதால் இறப்பீர்கள் என்றுதானே நினைப்பீர்கள். ஆனால் உண்மை என்னவென்றால் நீங்கள் சுவாசித்து வெளியே விடும் கார்பன்டை ஆக்ஸைடை மீண்டும் சுவாசிப்பதால் அதன் நச்சுத்தன்மையாலே இறப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

கண்கள் :

உங்கள் கண்களை நீங்கள் அதிக அளவு பயன்படுத்துகிறீர்கள். ஒரு பொருளை பார்ப்பதற்கு, தொலைவில் உள்ளதோ அல்லது அருகில் உள்ளதோ எதுவானாலும் அதை பார்ப்பதற்கு கண்களின் சதைப்பகுதியை அதிகம் பயன்படுத்துகிறோம். அனைத்து திசைகளிலும் பார்ப்பதற்கு, கூர்ந்து கவனிக்க என கண்களின் தசைகளுக்கு கொடுக்கும் வேலையை அப்படியே நமது கால்களுக்கு கொடுத்தால் ஒரு நாளில் நமது கால்கள் 80 கிலோ மீட்டர் நடந்திருக்குமாம்.

உமிழ்நீர் :

உமிழ்நீர் என்பது நமக்கு மிகவும் தேவையான ஒன்று. சாப்பாடு சாப்பிடும்போதும், நீர் அருந்தும்போதும் உமிழ்நீரோடு சேர்த்து விழுங்கும் போதுதான் செரிமானம் சீராகும். உமிழ்நீர் கலக்காமல் உள்ளே செல்லும் ஆகாரம் செரிக்காது. ஒரு நாளில் நமது வாயில் உண்டாகும் உமிழ்நீரின் அளவு 2 லிட்டர். வாழ்நாள் முழுவதும் வாயில் சுரக்கும் உமிழ்நீரின் அளவு 2 நீச்சல் குளங்களை நிரப்பும் அளவிற்கு இருக்கும்.

அமிலம் :

உமிழ்நீருக்கு அடுத்தபடியாக செரிமானத்திற்கு உதவுவது அமிலம். இந்த அமிலம் இயற்கையாகவே நமது உடலில் சுரக்கும். உணவு வயிற்றுக்குள் சென்றதும் இந்த அமிலமானது நொதித்தல் முறையில் உணவை செரிக்க வைக்கிறது. இந்த அமிலம் மிதமானதாக இருப்பதுதான் உடலுக்கு நல்லது. உணவு சாப்பிட்ட உடன் அதிக அளவு நீர் அருந்துவதை குறைத்துக் கொள்ளவும். எப்பொழுதும் சாப்பிட்டு 20 நிமிடம் கழித்துதான் நீர் அருந்த வேண்டும். சாப்பிட்ட உடன் அளவுக்கு அதிகமான நீர் அருந்துவதால் இந்த அமிலம் நீர்த்து போய்விடும். இதனால் செரிமானத்தின் அளவு குறையும். இந்த அமிலத்தின் தன்மை எப்படி இருக்குமென்றால் ஒரு உலோகத்தையே கரைக்கும் அளவிற்கு இருக்குமாம்.

விரல் :

நம் கையில் மிக முக்கியமான விரல் எதுவென்றால் அது சுண்டுவிரல். இது மிகச்சிறிய விரலாக இருந்தாலும் இதன் உதவி இல்லாமல் எந்த வேலையையும் செய்ய இயலாது. நமது கைக்கு 50 சதவீத உறுதி (பசip) சுண்டுவிரலால்தான் கிடைக்கிறது. இதற்கு நீங்களே சோதனை செய்து பாருங்களேன். எந்த வேலை செய்தாலும் சுண்டுவிரலை மடக்கி வைத்துக்கொண்டு செய்து பாருங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why temperature increased while fever 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->