கண்களில் ஏற்படும் பிரச்சனை அதிகளவு ஆபத்தாக என்ன காரணம்?.! சுதாரித்துக்கொள்ளுங்கள்.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள பலருக்கு கண் பார்வையில் குறைபாடுகள் உள்ளது. இதனை மருத்துவ துறையின் மொழியின் படி மோனோகுலர் விஷன் என்று அழைப்பது வழக்கம். சில நபர்களுக்கு குறிப்பிட்ட மணி நேரம் பார்வை இழப்பானது ஏற்படும். சிலருக்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டும் பார்வை குறைபாடுடன் இருக்கும். சிலருக்கு சில ஆண்களுகள் தொடர்ந்து இருக்கலாம். 

இவ்வாறு ஏற்படும் கண்களின் பாதிப்பை சரி செய்வதற்கு இரண்டு சிகிச்சை முறைகள் உள்ளது. இந்த சிகிச்சைக்கு முன்னர் ஒரு கண்ணின் பார்வையானது நேராகவும், மற்றொரு கண்ணின் பார்வையானது விலகி இருப்பது மாறுகண் என்றும், அவ்வாறு மாறுகண்களை கொண்டவர்கள் அதிஷ்ட நபர்கள் என்ற எண்ணமும் நம்மிடையே இருக்கிறது. 

மருத்துவ முறையில் மாறுகண் பிரச்சனைக்கு தீர்வு இல்லை என்றால் பார்வையை இழப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. அவ்வாறு மாறுக்கண்ணால் பாதிக்கப்பட்ட கண்களில் பதிவாகும் காட்சியானது மூளையில் பதிவாகாது. மற்றொரு கண்ணில் பதிவாகும் காட்சிகள் மூளையால் சேமிக்கப்படும். இந்த நிலையானது தொடர்ந்து ஏற்பட்டு வந்தால் கண்களின் செயல்பாடு வெகுவாக குறைய துவங்கும்.  

இதே நிலையானது தொடரும் பட்சத்தில் குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் இந்த பிரச்சனைக்கு எந்த சிகிச்சை எடுத்தாலும் பலனில்லாமல் போய்விடும். இதனால் கண்ணின் நேர்கொண்ட பார்வையை அறுவை சிகிச்சையின் மூலம் நாம் பெற்றாலும், கண்ணின் பார்வையை பெற இயலாது. இதற்கு அடுத்தபடியாக கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை பிரச்சனை உள்ளது. 

அந்த வகையில் இரண்டு கண்களிலும் இந்த கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது என்று கூற இயலாது, இது எந்த கண்ணில் இருந்தும் ஏற்படலாம். இரண்டு கண்களில் எதோ ஒரு கண்ணில் இந்த பிரச்சனை இருக்கும் சமயத்தில், ஒரு கண்ணை வைத்து சமாளித்து விடலாம் என்று நினைத்து வந்தால் அதிகளவு தலைவலியானது ஏற்படும். 

இந்த பிரச்சனையை முதலிலேயே அறிந்து கொள்ள இயலாத நபர்கள்., அதிகளவு தலைவலி தொடர்ந்து ஏற்படுவதன் மூலமாகவும், கண்களில் ஏற்படும் மாற்றத்தின் மூலமாகவும் முன்னரே சுதாரித்து கொள்வது நல்லது. தற்போது அதிகளவில் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வையின் காரணமாக கண்களின் பார்வை இழக்கும் பிரச்சனையானது அதிகளவில் இருந்து வருகிறது. 

கண் பார்வையில் ஏற்பட பல வாய்ப்புகள் உள்ள நிலையில், அனைத்து சூழலிலும் நமது கண்களை பராமரிப்பது நமது கடமையே. கண்களுக்கு பார்வை திறனை வளர்க்கும் உணவுகளை சாப்பிடுதல், மருத்துவரை சந்தித்து ஆலோசித்து கொள்ளுதல் போன்றவை மூலமாக நமது கண்களை பராமரிக்க இயலும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why eye problem so siviyarly react what is the causes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->