பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என அச்சம்; ஹோட்டல்களை விட்டு வெளியேற தனது குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்..!
The United States has advised its citizens to leave hotels in the Bahraini capital Manama
நேற்று காலை முதல் அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரானின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் தலைநகரில் ஒரு ஆரம்ப பள்ளியில் நதியா தாக்குதல் சிறுமிகள் உள்ளிட்ட 80 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் 14 ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து நடந்த தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் கமோனி கொல்லப்பட்டுள்ளார். இதன் காரணமாக பெரும் பதற்றம் நிலவுகிறது.
இந்த சூழலில், பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள ஹோட்டல்களை விட்டு வெளியேற தனது குடிமக்களுக்கு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஈரானின் அடுத்தடுத்த தாக்குதல்கள் ஹோட்டல்கள் மீது நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
"மனாமா நகரில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டல் (Crowne Plaza Hotel) மீது மார்ச் 01, 2026 அன்று தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் காயங்கள் ஏற்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம் கண்காணித்து வருகிறது.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு விடுக்கப்படும் அறிவுறுத்தல் என்னவென்றால், வருங்காலங்களில் ஹோட்டல்கள் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்பதால், மனாமா நகரில் உள்ள ஹோட்டல்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்க குடிமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளை குடா நாடுகளில் அதிகரித்துள்ள போர் பதற்றம் உலக நாடுகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The United States has advised its citizens to leave hotels in the Bahraini capital Manama