'சட்டமன்ற தேர்தலில் அதிமுக 210 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும்'; மதுரை கூட்டத்தில் இபிஎஸ் சூளுரை..! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக மதுரை வந்துள்ள நிலையில், மண்டேலா நகரில் நடைபெற்ற என்.டி.ஏ. பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் கூறியதாவது; உலக நாடுகளே மெச்சுகின்ற அளவுக்கு சிறப்பான நல்லதொரு ஆட்சியை இந்தியாவுக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி” எனத் தனது பேச்சைத் தொடங்கினார்.

தொடர்ந்து, இந்தியாவே தமிழ்நாட்டை உற்றுநோக்கி வருகிறது என்றும், தமிழகத்தை யார் ஆள வேண்டும், யார் ஆளக்கூடாது என்பதற்கான சட்டமன்றத் தேர்தல் வருகிறது. நம் கூட்டணி 210 இடங்களில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எதுவும் தரவதில்லை என அவதூறு பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று சுட்டிக்காட்டியுள்ளதோடு,  இன்றும் கூட 4,400 கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்களை கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதிமுக ஆட்சியில் ஒரே சமயத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை கொண்டு வந்தோம். திமுக ஆட்சியில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவர முடிந்ததா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இருந்தபோது தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனை கேட்டார். அதுவும் கொடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது என்று தெரிவித்ததோடு, அதனையும் திமுக அரசு முடக்கப் பார்த்தது என எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக சாட்டியுள்ளார். 

இந்தக் மதுரை கூட்டத்தில், என்.டி.ஏ. கூட்டணி கட்சித் தலைவர்களான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

EPS says in Madurai meeting that AIADMK will win 210 seats in the assembly elections and form the government


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->