பேயை விரட்டுவதாக கூறி சிறுமியின் பிறப்புறுப்பில் மரபொம்மை, ஆணியை திணித்து சித்ரவதை; பூசாரிக்கு சாகும்வரை சிறை தண்டனை..!
Priest who tortured girl while claiming to be exorcising a demon gets life sentence
பேயை விரட்டுவதாக கூறி 14 வயது சிறுமியை சித்ரவதை செய்த கோயில் பூசாரிக்கு சாகும்வரை இரட்டை ஆயுள் சிறையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பரவூர் பகுதியை சேர்ந்த பாலப்பனின் மகன் பினீஷ் (45). இவர் கடந்த 07 வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் திருவல்லம் பகுதியிலுள்ள ஒரு கோயிலில் பூசாரியாக பணிபுரிந்து வந்தார். அதன்படி, கடந்த 2019-ஆம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஒருவர், 09-ஆம் வகுப்பு படிக்கும் தனது 14 வயது மகளுடன் பூசாரி பினீஷை சந்தித்துள்ளார்.
குறித்த பெண் பூசாரியிடம், தனது மகளுக்கு தேர்வு பயம் இருப்பதாகவும், அதை போக்குவதற்காக சிறப்பு பூஜை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், சிறுமிக்கு பேய் பிடித்திருப்பதால் தனது அறையில் வைத்து பூஜை நடத்தவேண்டும் என்று பூசாரி பினீஷ் கூறியுள்ளார். அதற்கு சிறுமியின் தாயும் சம்மதித்த நிலையில், தொடர்ந்து கோயிலை ஒட்டியுள்ள அறைக்கு சிறுமியை பூசாரி பினீஷ் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வைத்து சிறுமியின் ஆடைகளை களைந்து பிறப்புறுப்பில் சிறிய மர பொம்மை, ஆணி, நாணயங்களை திணித்து பேய் ஊட்டுவதாக கூறி, சித்திரவதை செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து அறையில் இருந்து சிறுமியை வெளியே அழைத்து வந்த பூசாரி, சிறுமிக்கு பூஜை நடத்தி பேயை விரட்டி விட்டதாக கூறியுள்ளார். இதன் பிறகு அந்தப் பெண் தனது மகளை அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால் பல மாதங்கள் ஆகியும் சிறுமியின் தேர்வு பயம் குறையவில்லை. இதனால், சிறுமியின் தாய், மகளை அருகிலுள்ள மனநல மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை நடத்திய டாக்டரிடம் தன்னை பூசாரி கொடுமைப்படுத்தியது குறித்து சிறுமி கூறியத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து டாக்டர் போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில், புகாரின் அடிப்படையில், திருவல்லம் போலீசார் போக்சோ பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பூசாரி பினீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன்படி, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஷிபு, பூசாரி பினீஷுக்கு சாகும்வரை ஆயுள் சிறையும், ரூ. 02 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Priest who tortured girl while claiming to be exorcising a demon gets life sentence