மதுரை பொதுக்கூட்டம்; அதிமுக போஸ்டர்கள் இல்லாமல் பாஜக போஸ்டர்கள்; தவெக நிர்மல் குமார் விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மேலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கலந்துகொண்டு கட்சியினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து பேசப்பட்டதாகவும். அப்போது 234 தொகுதிகளிலும் ஆலோசனை கூட்டம் இன்று முதல் நடைபெற்று வருவதாகவும், கட்சியின் அடிமட்ட தொண்டர்களை தேர்தலில் களப்பணி ஆற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுரையில் பிரதமர் மோடி அவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் இருந்த தந்தை பெரியார் படம் அகற்றப்பட்டதற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

மதுரையில் மாநாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள அனைத்து பதாகைகளிலும் அதிமுக போஸ்டர்கள் இல்லாமல் பாஜக போஸ்டர் போல தெரிகிறதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா தலைவர்கள் படம் இல்லாமல் பாஜக தாங்கிய போஸ்டர்களாகவே உள்ளன. எம்ஜிஆர் ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவில் பெரியார் படத்தை முகப்பில் வைக்க முடியாத சூழல் வருத்தத்திற்குரியது என  விமர்சித்துள்ளார்.

அத்துடன், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆளுமை மிக்க தலைவராக விஜய் இருப்பதாகவும் தமிழகத்தில் இது போன்ற ஒரு எழுச்சி எந்த ஒரு தலைவருக்கும் இருந்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த தேர்தல் களத்தில் தவெக வருகையால் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் குழப்பத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nirmal Kumar criticizes BJP posters instead of AIADMK posters at Madurai public meeting


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->