நாகர்கோவில்; விபத்தில் மூளைச்சாவு அடைந்த சட்டக் கல்லூரி மாணவர் உடல் உறுப்புகள் தானம்..!
Organ donation of law college student who died of brain damage in Nagercoil accident
நாகர்கோவில் அருகே இறச்சக்குளம் பகுதியை சேர்ந்தவர் சார்ஸ் தனபாலனின் மகன் விஷால். 21 வயதான இவர் சட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.
இவர் கடந்த 21-ஆம் தேதி, இரவு பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், படுகாயமடைந்ததால் விஷால் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
இதையடுத்து அவரை, கடந்த 27-ஆம் தேதி, மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், விஷாலுக்கு மூளை சாவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அவரது குடும்ப உறுப்பினர்களிடம் எடுத்துக்கூறிய டாக்டர்கள் அவரது, உடல் உறுப்புகள் தானம் செய்வது குறித்து விளக்கியுள்ளனர்.

இதையடுத்து உடல் உறுப்புகளை தானம் செய்ய விஷால் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று உடல் உறுப்புகளை தானமாக எடுப்பதற்கான அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது.
இதில் விஷாலின் கல்லீரல், இரு சிறுநீரகம், இரு கரு விழிகள் மற்றும் தோல் தானமாக எடுக்கப்பட்டன. பின்னர் பிரேத பரிசோதனை நடந்து, விஷால் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டு இருந்த விஷால் உடலுக்கு, மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் லியோ டேவிட், டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள் மரியாதை செலுத்தினர்.
English Summary
Organ donation of law college student who died of brain damage in Nagercoil accident