ஆண்டின் முதல் சந்திர கிரகணம்; வரும் 03 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 10 மணி நேரம் நடை அடைப்பு..! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை மறுநாள் (மார்ச் 03-ஆம் தேதி) நிகழவுள்ளது.  அன்று பிற்பகல் 03.20 மணி முதல் மாலை 06.47 மணி வரை சுமார் மூன்றரை மணி நேரம் நீடிக்கும். இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்றைய தினம் 10 மணி நேரம் நடை அடைக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

பொதுவாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 06 மணி நேரத்திற்கு முன் நடை அடைப்பது வழக்கம். அதன்படி, 03-ஆம் தேதி காலை 09 மணி முதல் இரவு 07.30 மணி வரை ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்படவுள்ளது. பின்னர் இரவு 08.30 மணிக்கு பிறகு, கோயில் தூய்மை செய்யப்பட்டு பக்தர்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நாளையும், நாளை மறுதினமும் (02, 03-ஆம் தேதிகளில்) சுவாமி தரிசனத்திற்காக திருப்பதியில் வழங்கப்படும் சர்வ தரிசனத்தில், நேர ஒதுக்கீடு செய்து வழங்கப்படும் டோக்கன்கள் இன்றும், நாளையும் வழங்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.

பின்னர் வரும் 04-ஆம் தேதி சுவாமி தரிசனத்திற்கான சர்வ தரிசன டோக்கன்கள் வரும் 03-ஆம் தேதி முதல் வழக்கம்போல் வழங்கப்படும். அதேபோல், வரும் 03-ஆம் தேதி விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக நாளை (02-ஆம் தேதி) தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தேவஸ்தான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Due to the lunar eclipse the Tirupati Ezhumalaiyan Temple will be closed for 10 hours on the 3rd


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->