காலரா என்றால் என்ன? மற்றும் தடுக்கும் முறைகள்...!
What is cholera And how to prevent it
காலரா என்றால் என்ன ?
வாந்திபேதி அல்லது காலரா என்பது, விபிரியோ காலரே (Vibrio cholerae) எனப்படும் பக்டீரியாவினால் உண்டாகும் தொற்றக்கூடிய குடலழற்சி (gastroenteritis) நோய் ஆகும். இப்பக்டீரியாவைக் கொண்ட உணவு அல்லது நீரை அருந்துவதன் மூலம் இந்நோய் மனிதருக்குத் தொற்றுகிறது. இந் நோயை உண்டாக்கும் பக்டீரியாக்களைத் தேக்கி வைத்திருப்பது மனித உடலே என்று முன்னர் பெரும்பாலும் நம்பப்பட்டது.

ஆனால் நீர்சார் சூழலும் விபிரியோ காலரே என்னும் பக்டீரியாவைத் தேக்கி வைத்திருக்கக்கூடும் என்பதற்கான சான்றுகள் இப்போது அறியப்பட்டுள்ளன.
காலரா, உடலில் நீர் வறட்சி, வாந்தி, பேதியை உருவாக்கும் தன்மை கொண்டது. இந்த பாக்டீரியா சிறுகுடலை தாக்கி ஒரே இரவில் உயிரை பறிக்கும் அளவு திறன் கொண்டது. உலகளவில் 50 லட்சம் மக்கள் இந்த பாக்டீரியா மூலம் பாதிப்படைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது, சுகாதாரமற்ற உணவு மற்றும் நீரின் மூலமாக பரவுகிறது. ஒவ்வொரு வருடமும் காலரா மூலம் 1,20,000 பேர் உலகில் மரணம் அடைகிறார்கள்.
பரவாமல் தடுக்கும் முறைகள் :
காலராவால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்வதுடன், 100 டிகிரி கொதிக்க வைத்த தண்ணீரை ஆற வைத்து பருக வேண்டும்.
வெளியிடங்களுக்கு செல்லும் போது தரமற்ற தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி பருகுவதை தவிர்க்க வேண்டும்.
கூடுமான அளவு, சாக்கடை கழிவுகள் தேங்கியுள்ள சாலைகளில் செல்லும் போதும், வெளியிடங்களுக்கு போய் விட்டு, வீட்டிற்கு வரும் போதும், கால்களை தண்ணீரால் சுத்தம் செய்து விட்டு உள்ளே செல்வது நலம் பயக்கும்.
English Summary
What is cholera And how to prevent it