வெட்டிவேரின் மகத்தான மருத்துவ குணங்கள்... வாங்க பார்க்கலாம்.!
Vetiver medicinal properties in tamil
* வெட்டிவேரை எலுமிச்சை வேர் என அழைக்கப்படும். நீர்க்கடுப்பு, தேக எரிச்சல், வயிற்று கடுப்பு போன்றவற்றை குணப்படுத்த வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்தி பொடி செய்து அதனுடன் பெருஞ்சீரக பொடி சேர்த்து வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்.
* கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்க வெட்டிவேர் பயன்படுகிறது. வெட்டிவேரை நீரில் ஊற வைத்து தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சூடு தாகம் தனியும். நாவறட்சி, தாகம், காய்ச்சல், வயிற்றில் ஏற்படும் நோய்கள் போன்றவற்றை வெட்டிவேர் கட்டுப்படுத்துகிறது.

* வாந்தி, பேதிக்கு வெட்டிவேர் நல்ல மருந்தாக பயன்படுகிறது. சளி, இருமல் தொந்தரவு ஏற்படாமல் வெட்டிவேர் பாதுகாக்கிறது. வெட்டிவேர் எண்ணெய்யை கொண்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருக்கும் வடுக்கள் மீது தடவி வந்தால் விரைவில் ஆறும். வெட்டிவேர் எண்ணெய்யை தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும்.
* வெயில் காலங்களில் ஏற்படும் வியர்வை அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர குணமடையும். தீக்காயங்களின் மீது வெட்டிவேரை அரைத்து பூசினால் காயங்கள் விரைவில் குணமடையும். கால் எரிச்சல், கால் வலி போன்றவற்றிற்கு வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் சேர்த்து நன்கு காய்ச்சி ஆற வைத்து இரண்டு நாள் கழித்து வடிகட்டி தேய்த்துக்கொள்ளலாம்.
English Summary
Vetiver medicinal properties in tamil