ஐய்யயோ! அச்சுறுத்தும் இருவகையான கொரோனா தொற்று...! சீனாவை தாண்டி இந்தியாவிலும் கண்டுபிடிப்பு...!
Two types of threatening corona infection Discovered in India beyond China
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, உலகையே அச்சுறுத்திய ''கொரோனா தொற்று'' மீண்டும் பல நாடுகளை மிரட்டி வருகிறது. இதில் சீனா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக 2 வகை கொரோனா மாறுபாடு வைரஸ்கள் இருப்பதாக 'உலக சுகாதார நிறுவனம்' அடையாளம் கண்டுள்ளது.அவ்வகையில் என்பி.1.8.1 மற்றும் எல்எப்.7 ஆகிய 2 கொரோனா திரிபு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வகை வைரஸ்களால், இந்த சீனா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் தொற்று வேகமாக பரவி வருவது தெரியவந்துள்ளது.இந்த 2 வகை கொரோனாவும் இந்தியாவிலும் கண்டறியப்பட்டு இருக்கிறது.
அதன்படி என்பி.1.8.1. வைரஸ் கடந்த மாதம் தமிழ்நாட்டில் ஒருவருக்கும், எல்எப்.7 வகை வைரஸ் குஜராத்தில் 4 பேருக்கும் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மாறுபாடுகள் கண்காணிப்பின் கீழ்தான் இருப்பதாகவும், அவை அபாயமானவையாக இதுவரை வரையறுக்கப்படவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Two types of threatening corona infection Discovered in India beyond China