கண்களில் அரிப்பா? இதை ட்ரை பண்ணி பாருங்க.!
tips of clear eye problams
தூசிகள், புகை, அழுக்குகள் உள்ளிட்டவற்றால் கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சல் உண்டாகும். அப்போது, நாம் அவசர அவசரமாக கைகளை வைத்து கண்களைத் தேய்த்து விடுவோம். அப்படி செய்யும் போது கைகளில் இருந்து கண்களுக்கு தொற்றுக் கிருமிகள் பரவுகிறது.
இந்த தொந்தரவுகளை போக்க ஒருசில இயற்கை மருத்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம். அதுகுறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கண்கள் மீது வைத்து வந்தால், வறண்ட கண்கள் குளிர்ச்சியடைந்து அரிப்பு மற்றும் எரிச்சல் குணமாகும்.

* ரோஸ் வாட்டரை தண்ணீரில் கலந்து துணியில் நனைத்து கண்களை துடைத்து வந்தால் அரிப்பு நீங்கும்.
* பாலை துணியில் நனைத்து இமைகள் மீது துடைத்து வர அரிப்பு குணமாகும்.
* தயிரை கண்கள் மீது பூசி சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் துணியை நனைத்து துடைத்து வரலாம்.
* சீரகத் தண்ணீரை கொண்டு தினமும் இருவேளை கண்களை கழுவி வந்தால், எரிச்சல் மற்றும் அரிப்பு நீங்கும்.
English Summary
tips of clear eye problams