சளியை துரத்தி,பசியை தூண்டும்  தூதுவளை ரசம்.! டக்குனு செஞ்சிடலாம்.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

தூதுவளை ஒரு கைப்பிடி,
சின்ன வெங்காயம் 10,
பூண்டு 10, 
மிளகு, சீரகம் - ஒரு ஸ்பூன், 
தக்காளி ஒன்று, 
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி, 
காய்ந்த மிளகாய் - 2,
பச்சை மிளகாய் 2, 
கடுகு அரை ஸ்பூன், 
உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன், 
கருவேப்பிலை சிறிதளவு,
புளி - ஒரு எலுமிச்சை அளவு.
எண்ணெய் - 2ஸ்பூன் 

செய்முறை : 

ஒரு மிக்ஸியில் நன்றாக அலசி எடுத்த தூதுவளை மிளகு, சீரகம் பூண்டு, பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து கருவேப்பிலை,காய்ந்த மிளகாய், சேர்த்து சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கிய  உடன் அதில் அரைத்து வைத்த விழுதை சேர்த்து வதக்கவும். பின்பு புளியை கரைத்து அதில் ஊற்றி தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். பின்பு கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

இதை கிளாசில் ஊற்றி குடிக்கலாம் அல்லது சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம்.இது நெஞ்சு சளி , தொண்டை கரகரப்பு,போன்றவற்றை போக்கி பசியை தூண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thuthuvalai rasam For Cold and Cough problems


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->