தீராத சளியை துரத்தி அடிக்கும் தூதுவளை - எப்படி பயன்படுத்துவது?
thoothuvalai juice
தொண்டை வலி, சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கும். இந்த தூதுவளையை எப்படி சாப்பிட்டால் சளி தீரும் என்று இந்தப் பதிவில் காண்போம்.
முதலில் தூதுவளை இலையை பறித்து அதனை நன்கு அரைத்து சாறு எடுக்க வேண்டும், இதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். இந்த சாறை குடிப்பதால் ஆஸ்துமா மற்றும் மூச்சுத் திணறல் பிரச்சினைகளை குணமாகும். தூதுவளை இலையின் சாறு சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
இரத்தசோகை உள்ளவர்கள் இந்த இலைகளின் சாறை குடிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். இந்த சாறு குடல் புழுக்களை அகற்றி, செரிமானத்தை மேம்படுத்துகிறது. அதே சமயம் இந்த சாறை அதிகளவில் உட்கொண்டால், வயிற்று புண் ஏற்படும். அது மட்டும் இல்லாமல் வயிற்று போக்கு, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.