ஐந்தே நிமிடத்தில் தீவிரமான குதிங்கால் வலி போக இந்த முத்திரை ஒன்று போதும்...! - Seithipunal
Seithipunal


குதிங்கால் வலி ஏன் வருகிறது?
குதிங்கால் வலிக்கு இரண்டு முக்கிய காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
சயாட்டிகா: முதுகுத்தண்டில் ஏற்படும் அழுத்தம், சயாடிக் நரம்பு வழியாக குதிங்கால் வரை வலியை ஏற்படுத்தும். இது சயாட்டிகா என்று அழைக்கப்படுகிறது.
கால்கேனியல் ஸ்பர் (Calcaneal Spur): இதுதான் குதிங்கால் வலிக்கு ஒரு பொதுவான காரணம். குதிங்கால் எலும்பில் ஒரு "எலும்பு குருந்து" அதிகமாக வளரத் தொடங்குவதையே கால்கேனியல் ஸ்பர் என்கிறோம். எக்ஸ்ரேயில் இது எலும்பு வளர்ந்தது போல் தெரிந்தாலும், உண்மையில் இது எலும்புக் குருத்து (cartilage) போன்ற ஒரு மென்மையான, ஜெல்லி போன்ற அமைப்பாகும். இது வளர வளர, சுற்றியுள்ள தசைகள் மற்றும் தசைநாளங்களை அழுத்தி கடுமையான வலியை ஏற்படுத்தும்.


5 நிமிடத்தில் குதிங்கால் வலியைப் போக்கும் சங்கல்ப முத்திரை:
இவ்வளவு தீவிரமான குதிங்கால் வலியை வெறும் 5 நிமிடத்தில் சரிசெய்ய முடியுமா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆம், அதற்கு ஒரு அருமையான முத்திரை உள்ளது. அதுதான் சங்கல்ப முத்திரை.
செய்யும் முறை:
இது மிகவும் எளிமையான ஒரு முத்திரை. உங்கள் ஐந்து விரல்களின் நுனிகளையும் ஒன்றிணைத்து குவித்து வைக்க வேண்டும். ஆனால், இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கட்டை விரலின் நுனியை மற்ற நான்கு விரல்களின் நுனிகளும் தொட்டிருக்க வேண்டும்.குதிங்கால் வலி உள்ளவர்களுக்கு ஆரம்பத்தில் இந்த முத்திரையை செய்வது சற்றுக் கடினமாக இருக்கலாம். ஆனால், ஓரிரு நாட்கள் முயற்சி செய்து பழகிவிட்டால் எளிதாக செய்துவிடலாம்.
பலன்கள்:
ஒருவர் 5 நிமிடங்கள் இந்த முத்திரையை முறையாகச் செய்யும்போதே, குதிங்கால் வலி 40% முதல் 50% வரை உடனடியாகக் குறையத் தொடங்கும். தொடர்ந்து சில நாட்கள் இதைச் செய்து வரும்போது, குதிங்கால் வலி முழுவதுமாக மறைந்துவிடும்.ஆச்சரியப்படும் விதமாக, கால்கேனியல் ஸ்பர் எனப்படும் எலும்பு குருத்து வளர்ச்சியும் படிப்படியாகக் குறையத் தொடங்கி, முற்றிலும் மறைந்துவிடும்!
முத்திரை எப்படி வேலை செய்கிறது?
நம் உடலில் ஐந்து பூதங்கள் (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) சமநிலையில் இருக்கும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த பஞ்சபூதங்களில் சமநிலை குலையும்போது, சில பகுதிகளில் கடுமையான வலி ஏற்படும். ஐந்து விரல்களையும் குவித்து வைப்பதன் மூலம், நாம் இந்த பஞ்சபூதங்களை சமநிலைப்படுத்துகிறோம். சங்கல்ப முத்திரை இந்த பஞ்சபூத சமநிலையை சரிசெய்வதன் மூலம் குதிங்கால் வலியைக் குறைக்கிறது.
எவ்வளவு நேரம் :
தொடக்கத்தின்,ஆரம்பத்தில் தினமும் 5 நிமிடங்கள் செய்யலாம். அதிக வலி உள்ளவர்கள் அல்லது முழுமையான நிவாரணம் தேவைப்படுபவர்கள், தினமும் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.கால்கேனியல் ஸ்பர் உள்ளவர்கள், வலி குறைந்த பிறகும் சில நாட்கள் தொடர்ந்து அதிக நேரம் செய்து வருவது நல்லது. இது மீண்டும் வலி வராமல் தடுக்க உதவும்.இந்த முத்திரை பல நோயாளிகளுக்கு உடனடி நிவாரணம் அளித்து, அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நீங்களும் குதிங்கால் வலியால் அவதிப்படுபவராக இருந்தால், இந்த எளிய சங்கல்ப முத்திரையை முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This one stamp is enough to cure severe heel pain in just five minutes


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->