அறிந்து கொள்ள வேண்டியவை : வலிப்பு வரும்போது செய்ய வேண்டியதும்,செய்யக்கூடாததும்...!
Things to know Dos and donts when having a seizure
வலிப்பு வரும்போது செய்வதும், செய்யக்கூடாததும்
வலிப்பு வரும்போது செய்யவேண்டியது :
பதட்டப்படாமல் நோயாளியை அமைதியாக கையாள வேண்டும்.
நோயாளியை ஒரு பக்கமாக, படுக்க வையுங்கள். இதனால் வாயில் அதிகமாக தோன்றும் உமிழ்நீர், நுரை போன்றவை வெளியேறுவது, சுலபமாகும். இதனால், சுவாசத்திற்கு எந்த பாதிப்பும் வராது. நோயாளியின் அருகில் உள்ள பொருட்களை, அகற்ற வேண்டும். இது, நோயாளி அப்பொருட்களின் மேல் முட்டி அடிபடுவதைத் தவிர்க்கும்.

சிறு தலையணை, துணி மடிப்புகளை, தலைக்கடியில் வைக்கவும்.
அடிபட்டிருந்தாலோ, வலிப்பு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீட்டித்தாலோ, நிற்காமல் திரும்பத் திரும்ப வந்தாலோ, ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.
வலிப்பு வரும்போது செய்யக்கூடாதது :
நோயாளியைச் சுற்றி கூட்டமாக நிற்கக் கூடாது.
காற்றோட்டமான சூழல் மிக அவசியம்.
வாயில், பற்களுக்கிடையில் எப்பொருளையும் வைக்கக்கூடாது.
கையில் சாவி, கூரான பொருட்கள் தருவதைத் தவிர்க்க வேண்டும்.
முழு சுய நினைவு வரும் வரை, குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக்கூடாது.
English Summary
Things to know Dos and donts when having a seizure