வலது புற வயிற்றில் வலி ஏற்படுகிறதா? அப்பெண்டிஸைட்டிஸாக இருக்கலாம்! உஷார்! - Seithipunal
Seithipunal


அப்பெண்டிஸைட்டிஸ் என்பது  குடல் வாலில் ஏற்படக்கூடிய ஒரு அழற்சியாகும். இது எந்த வயதிலும் ஏற்படக்கூடியது ஆனால் 10 முதல் 30 வயதிற்கு உட்பட்டவருக்கு  பெரும்பான்மையாக ஏற்படுகின்ற ஒன்று.

அப்பன்டிஸ் எனப்படுவது நமது வயிற்றின் கீழ் வலது பக்கத்தில் உள்ள பெருங்குடலில் இருந்து வெளியேறும் விரல் வடிவ பையாகும். இது உணவு மற்றும் கழிவுகளை தேக்கி வைக்க பயன்படக்கூடிய ஒன்று.

ஏற்படுவதற்கான காரணங்கள் :
இந்தக் குடல் வால்வின்   உட்பகுதியில் அடைப்பு ஏற்படுவதால் குடல் அழற்சிக்கு காரணமாக அமைகிறது. இதில் வேகமாக பரவக்கூடிய பாக்டீரியா தொற்றானது நம்முடைய குடல்  வால்வில் அழற்சி, வீக்கம் மற்றும் சீழ்  ஆகியவற்றை நிரப்புகிறது. இதன் காரணமாக அப்பெண்டிசிட்டிஸ் என்ற குடல் வாள் அழற்சி நோய் ஏற்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து  குணப்படுத்தாவிட்டால் அது சிதைந்து அந்த பையை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

குடல் அழற்சியின் அறிகுறிகள்:
அடிவயிற்றின் வலது பக்கத்தில் திடீரென ஏற்படும் வலி, இந்த வலியானது திடீரென  தொப்புளை சுற்றி தொடங்கி  அடிவயிற்றின் வலது பக்கத்திற்கு கீழ் அடிக்கடி மாறும். இந்த வலியானது நமக்கு இருமல் வரும்போது மற்றும் நடக்கும்போது இன்னும் தீவிரமடையும். குமட்டல்  வாந்தி ,பசியிழப்பு, மலச்சிக்கல் ,வாய்வு  மற்றும் வயிறு உப்பி இருத்தல்  ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை உடனடியாக அலோசிப்பது நலம்.

இதனால் ஏற்படும் விளைவுகள்:
குடல் அழற்சி கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும்  ஒன்றாகும். குடல் அழற்சி  ஆரம்பத்திலேயே கவனிக்காமல்  அலட்சியமாக இருந்தால் அந்தப் பையானது  வெடித்து சிதைந்து விடும் . இது நம் வயிறு முழுவதும் பெரிட்டோனிடிஸ் என்ற தொற்று பரவ காரணமாகிறது. இதன் காரணமாக உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம். இந்த நிலை ஏற்படும் போது அப்பன்டிக்ஸ் வால்வை சிகிச்சை மூலமாக  அகற்றி  நம் வயிறு முழுவதையும் சுத்தம் செய்ய வேண்டி வரும்.

இதற்கான சிகிச்சை முறைகள்:
நமக்கு ஏற்படுகின்ற அறிகுறிகளை வைத்து  மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனை சிறுநீர் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே அல்லது சிடி ஸ்கேன் கால் புதிய சோதனைகளின் மூலம்  நமக்கு அப்பன்டிஸைட்டிஸ் இருப்பதை உறுதி செய்யலாம்.
அப்பென்டெக்டோமி என்ற திறந்த வயிற்று அறுவை சிகிச்சையின் மூலம் இதனை குணப்படுத்தலாம். மேலும் தற்காலங்களில்  லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகளின் மூலம் எளிமையான முறையில் இவற்றை குணப்படுத்த முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Symptoms cause of treatment of appendicitis


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->