மீல் மேக்கரை உணவில் சேர்த்துக் கொள்வது நன்மையா? தீமையா? - Seithipunal
Seithipunal


பொதுவாக சோயாபீன்ஸிலிருந்து பல உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. சோயா பால், சோயா சாஸ், சோயா எண்ணெய் போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. சோயா எண்ணெய் தயாரித்த பிறகு அதிலிருந்து கிடைக்கக்கூடிய கழிவு பொருள் தான் மீல் மேக்கர். 

இதனை வெறும் சக்கை என நினைத்து விடாதீர்கள். இதில் அதிக அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. சைவப் பிரியர்கள் அசைவ உணவுகளை உண்பதற்கு பதில் இதனை உட்கொள்ளலாம். 

நமது உடலுக்கு புரதம் அடிப்படை சத்தாக உள்ளது. இத்தகைய சத்து கடல் உணவான மீன்களில் அதிக அளவு உள்ளது. அதுபோல் மீல் மேக்கரிலும் புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. 

சோயா பீன்சில் இருந்த தயாரிக்கப்படும் மீல்மேக்கரை உட்கொள்வதால் இதயத்திற்கு தேவையான சக்தி அதிகரிக்கிறது. இதயத்தில் உள்ள ரத்த குழாய்களின் இலகு தன்மை அதிகரிக்கும். 

தேவையற்ற கொழுப்புகளை குறைத்து இரத்த குழாய்களுக்கு அடைப்புகளை ஏற்படுத்தாமல் தடுக்கும். இருப்பினும் மீல் மேக்கரை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் உடலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. 

குறிப்பாக ஆண்கள் அதிக அளவில் மீல்மேக்கரை சாப்பிட்டால் ஹார்மோன் மாற்றங்கள், மலட்டுத்தன்மை, விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு போன்ற பிரச்சனை உண்டாகும். இதனால் அனைவரும் அளவாக மீல்மேக்கரை உட்கொள்வது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

soya mealmaker benefits in tamil


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->