சின்ன பழக்கங்கள் பெரிய பிரச்சினை...! ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த 13 முக்கிய வழிகள் இதோ...! - Seithipunal
Seithipunal


ரத்த அழுத்தம் என்பது, இதயம் சுருங்கி விரியும் செயல்பாடுகளின் போது ரத்தம் நாளங்களில் ஏற்படுத்தும் அழுத்தத்தை குறிக்கும் ஒரு முக்கிய உடல்நிலை அளவாகும். இதயத் தசைகள் சுருங்கி, இடது வென்ட்ரிக்கிளிலிருந்து மகாதமனி வழியாக ரத்தத்தை வெளியேற்றும் போது உருவாகும் அழுத்தம் “சிஸ்டாலிக் ரத்த அழுத்தம்” என அழைக்கப்படுகிறது.

அதேபோல், இதயம் மீண்டும் தளர்ந்து ரத்தத்தை நிரப்பிக் கொள்ளும் நேரத்தில் உருவாகும் அழுத்தம் “டயஸ்டாலிக் ரத்த அழுத்தம்” ஆகும்.பொதுவாக, ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. எச்ஜி என்ற அளவில் இருந்தால் அது இயல்பானதாக கருதப்படுகிறது. இந்த அளவில் சிறிய மாற்றங்கள் சாதாரணமானவை.

ஆனால் 140/90 மி.மீ. எச்ஜி அல்லது அதற்கு மேல் இருந்தால், அது உயர் ரத்த அழுத்தம் எனப் பார்க்கப்படுகிறது.உயர் ரத்த அழுத்தம் நீண்ட காலம் கண்டறியப்படாமல் இருந்தால், ரத்த நாளங்களின் நெகிழ்வு தன்மை குறைந்து, அவை கடினமடைந்து சுருங்கும் நிலை உருவாகிறது. இதனால் பக்கவாதம் போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

மேலும், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, செயலிழப்பு ஏற்படும் நிலையும் உருவாகக்கூடும்.இந்த நோயின் முக்கிய தன்மை, பெரும்பாலும் எந்த அறிகுறிகளும் இல்லாமல் உடலை அமைதியாக பாதிப்பதாகும். எனவே, சிகிச்சை தேவைப்படும் நிலைக்கு வருவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மிக முக்கியம்.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
பிராணாயாமம் போன்ற சுவாச பயிற்சிகள் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.
தினமும் குறைந்தது 6–7 மணி நேரம் நன்றாக தூங்குவது உடல் நலத்திற்கு அவசியம்.
உணவில் உப்பு, எண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும். அளவை குறைத்தால் உடல் நலன் மேம்படும்.
அதிக கார்போஹைட்ரேட், உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை அளவோடு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
மதுபானம் ரத்த அழுத்தத்தை உயர்த்தும் என்பதால், அதை குறைக்க அல்லது தவிர்க்க வேண்டும்.
ஒமேகா-3 சத்து நிறைந்த மீன் உணவுகள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், டின் உணவுகள், அப்பளம், ஊறுகாய், கருவாடு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
தினசரி நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல் அல்லது விளையாட்டுகள் போன்ற உடற்பயிற்சிகளை 30–45 நிமிடங்கள் மேற்கொள்ள வேண்டும்.
பொட்டாசியம் நிறைந்த இளநீர், வாழைப்பழம், பேரீச்சை, கொய்யாப்பழம் போன்றவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.
திராட்சை (தோல், விதையுடன்) சாறு குடிப்பது இதய நலனை மேம்படுத்தும்.
கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பால், முட்டை வெள்ளை, கீரைகள், பீன்ஸ், வாழைத்தண்டு, வெண்டைக்காய் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.
மன அழுத்தத்தை குறைக்க தியானம், பிரார்த்தனை போன்ற மன அமைதி தரும் செயல்களில் ஈடுபடலாம்.
புகைப்பழக்கத்தை முற்றிலும் தவிர்ப்பது அவசியம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Small habits big problem Here 13 important ways control blood pressure


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->