"என்னதான் டயட், உடற் பயிற்சி செய்தாலும், உடல் எடை மட்டும் குறையமாட்டேங்குதா"! அப்போ இந்த ஜூஸ் மட்டும் குடிச்சி பாருங்க! - Seithipunal
Seithipunal


இந்த சக்தி வாய்ந்த கொடம்புளி ஜூசைக் குடியுங்கள், அடம்பிடிக்கும் கெட்ட கொழுப்புகள் உடலை விட்டு ஓடி விடும்.

தேவையான பொருட்கள்:
கொடம்புளி - 1 எலுமிச்சைப்பழ சைஸ் உருண்டை.

கொடம்புளி பயன்படுத்தும்முன் நன்கு கழுவவேண்டும். இரவில் 1 டம்ளர்தண்ணீரில், கழுவிய கொடம்புளியை போட வேண்டும்.

மறுநாள் காலையில் அதையெடுத்து மண்பானை அப்படி இல்லை என்றால் ஸ்டீல் பாத்திரத்தில் வைத்து 3 கப் தண்ணீர் ஊற்றவும் பிறகு, அதில் ஊறவைத்த கொடம்புளியும் அதன் தண்ணீரையும் ஊற்றவும்.

பிறகு அடுப்பில் வைத்து கொதி வந்ததும், மிதமான தீயில் வைக்கவும். மிதமான தீயில் 5 நிமிடங்கள் வரை வைத்து அடுப்பை அணைத்து விடவும்.

இளஞ்சூடாக மாறியதும் கண்ணாடி 
ஜாரில் இந்த ஜூஸை ஊற்றி வைக்கவும்.

கொடம்புளி ஜூஸை குடிக்கும் முறை:

சேமித்து வைத்த கண்ணாடி ஜாரிலிருந்து 1 டம்ளர் அளவு கொடம்புளி தண்ணீர் எடுத்துக்கோங்க‌.

காலை உணவு சாப்பிடுவதற்கு முன் அரைமணி நேரத்திற்கு முன்பு இதை குடியுங்கள்.

அதுபோல மதிய உணவு இரவு உணவு  சாப்பிடுவதற்கு முன்பே, 1/2 மணி நேரத்துக்கு முன் இதை 1 டம்ளர் அளவுக்கு குடிக்க வேண்டும்.

இவ்வாறு செய்துவர கொழுப்பை குறைத்து உடல் எடையை சரசரவென்று குறைக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pot tamarind water initiates weight loss


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->