சர்க்கரை நோய்க்கு நிரந்தர தீர்வு! குடல் சார்ந்த புதிய சிகிச்சை வழி கண்டுபிடிப்பு – கனடா விஞ்ஞானிகள் அதிரடி ஆய்வு!
Permanent solution to diabetes New intestinal treatment method discovered Canadian scientists conduct groundbreaking research
சர்க்கரை நோய் இன்று உலகளவில் கோடிக்கணக்கான மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் நிலைமை அனைவரும் அறிந்ததே. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, போதிய தூக்கம், மருந்துகள் போன்றவை சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. ஆனால் இவை நிரந்தர தீர்வாக இல்லாமல், வெறும் கட்டுப்பாட்டு முறைகளாக தான் இருந்து வருகின்றன.
இந்த நிலையில், கனடா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சர்க்கரை நோயை நிர்வகிக்க புதிய தீர்வை கண்டுபிடித்துள்ளனர். குடலுக்குள் உள்ள சில பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யும் டி-லாக்டேட் (D-Lactate) என்ற மூலக்கூறு, கல்லீரல் செயல்பாட்டை பாதித்து, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதுவரை இன்சுலினை குறிவைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் கனடா விஞ்ஞானிகள், டி-லாக்டேட்டை நேரடியாக கட்டுப்படுத்தும் வழியை தேடி கண்டுபிடித்துள்ளனர். அதற்காக, டி-லாக்டேட் இரத்த ஓட்டத்தில் கலக்கும் முன்பே அதை கையிலெடுத்து உடைக்கும் தன்மை கொண்ட ஒரு குடல் கிருமியை கண்டறிந்துள்ளனர்.
இந்த புதிய முறையை முதலில் அதிக உடல் எடையுள்ள பருமனான எலிகளில் சோதனை செய்தனர். அதில்,இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்தது,இன்சுலின் எதிர்ப்பு குறைந்தது,கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட்டது,
என்பது கண்டறியப்பட்டது. முக்கியமாக, உணவுமுறை அல்லது உடல் எடையில் எந்த மாற்றமும் இல்லாமலேயே இந்த முன்னேற்றங்கள் நடந்தது என்பதே ஆய்வின் சிறப்பு.
விஞ்ஞானிகள், குடல் மற்றும் கல்லீரலின் தொடர்பு எதிர்கால நீரிழிவு சிகிச்சைக்கு புதிய கதவைத் திறக்கும் எனக் கருதுகின்றனர்.
டி-லாக்டேட் அதிகரிப்பு, கொழுப்பு சேமிப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்பை மோசமாக்குகிறது.இதை சீராக்க “குடல் அடி மூலக்கூறு பொறி” (Gut Molecule Trap) எனப்படும் புதிய சிகிச்சை உருவாக்கப்பட்டுள்ளது.இந்த முறையில், டி-லாக்டேட் கல்லீரலுக்குச் செல்லும் முன் கைப்பற்றி உடைத்துவிடப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பு தற்போது சோதனை நிலையில் உள்ளது. எலிகளில் பெற்ற வெற்றியை மனிதர்களிலும் பரிசோதித்து உறுதிப்படுத்தினால், இன்சுலின் ஊசி அல்லது மாத்திரைகளுக்கு மாற்றாக, குடல் சார்ந்த நீரிழிவு சிகிச்சை உருவாக வாய்ப்பு உள்ளது.
செல் மெட்டபாலிசம் (Cell Metabolism) இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, உலகம் முழுவதும் சர்க்கரை நோயால் தவிக்கும் நோயாளிகளுக்கு நீண்டகால தீர்வை வழங்கும் திறவுகோலாக பார்க்கப்படுகிறது.
English Summary
Permanent solution to diabetes New intestinal treatment method discovered Canadian scientists conduct groundbreaking research