மருத்துவ குணம் நிறைந்த ''சின்ன வெங்காயம்'' சாப்பிடுவதால் என்ன பயன்?  - Seithipunal
Seithipunal


* சின்ன வெங்காயத்தில் புரதச்சத்து, தாது உப்புகள், வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளது. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு அதில் உள்ள ப்ரொபைல் டை சல்பைட் காரணம். 

* இதனால் வெங்காயத்தை நறுக்கும் பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது. சின்ன வெங்காயம் மென்று தின்றால் ஜலதோஷம் குறையும். தும்பல், நீர்க்கடுப்பு குணமாகும். 

* சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி நல்லெண்ணையில் வதக்கி தொடர்ந்து சாப்பிடுவதால் ரத்த கொதிப்பு குறையும். இதயம் வலுப்பெறும். 

* மூலநோய் இருப்பவர்கள் சின்ன வெங்காயத்தை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. சின்ன வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மோரில் சேர்த்து குடித்தால் உடல் வலுப்பெறும். பல் வலி, ஈறு வலி போன்றவை குறையும். 

* புகை பிடிப்பவர்கள் வெங்காய சாற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவதால் நுரையீரல் சுத்தமாகும். தேள் கடித்த இடத்தில் வெங்காயச் சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. 

* தேம்பல், படை போன்றவற்றின் மேல் வெங்காயச்சாற்றை தடவினால் குணமடையும். வெங்காயச் சாறுடன் கடுகு எண்ணெய் சேர்த்து மூட்டு வலி ஏற்படும் போது தடவினால் வலி குணமாகும். 

* வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிடுவதால் சீதபேதி குணமடையும். உப்பு கலந்து சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் சரியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

onions medicinal benefit in tamil


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->