ஆண்களுக்காக கருத்தரிப்பு தடை ஊசி.! உலகிலேயே சாதனை படைத்த இந்தியா.! - Seithipunal
Seithipunal


உலகிலேயே முதன் முதலாக ஆண்களுக்கான கருத்தடை ஊசியை உருவாக்கி, அதை சோதித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாதனை படைத்துள்ளது.

13 ஆண்டுகள் பலன் தரும் கருத்தடை ஊசி, இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.

மூன்று கட்டங்களாக, 303 நபர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், 97.3 விழுக்காடு அளவிற்கு, வெற்றிக்கரமான முடிவு கிடைத்துள்ளது. இந்த ஆண்களுக்கான கருத்தடை ஊசியால் எந்த பக்க விளைவும் இல்லை என நிரூபிக்கப்பட்டிருப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

ஆண்களுக்கான கருத்தடை ஊசி தொடர்பான ஆராய்ச்சியில் அமெரிக்காவும் ஈடுபட்டிருந்தாலும், அந்த ஆராய்ச்சி ஆரம்ப கட்டத்திலேயே தான் உள்ளது. இதேபோன்றதொரு, ஆண் கருத்தடை ஊசியை பிரிட்டனும் உருவாக்கியது, ஆனால் அந்த  கருத்தடை ஊசி கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதால் அத்திட்டத்தை, பிரிட்டன் நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian medical council


கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..Advertisement

கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..
Seithipunal