கோவில்களில் இருக்கும் வில்வ மரத்தின் மகத்துவத்தை அறிவீர்களா நீங்கள்?.!!  - Seithipunal
Seithipunal


வில்வ மரம்.... இந்த மரத்தை நாம் பெரும்பாலும் அதிகளவு கோவில்களில் கண்டிருப்போம். வில்வ மரத்தில் இருக்கும் வில்வகாய்களை சிறுவயதில் நமது தாயார் அல்லது நமது பாட்டி நமக்கு சீனியுடன் சேர்த்து பிசைந்து தருவார்கள். அதில் உள்ள இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையை நாம் சுவைத்து சாப்பிட்டிருப்போம். அந்த வகையில் வில்வ மரத்தில் இருக்கும் வில்வ காய்களின் மருத்துவ குணங்கள் குறித்து இனி காண்போம். 

வில்வக்காயில் இருக்கும் டேனின் வேதிப்பொருள் காரணமாக வயிற்றுப்போக்கு மற்றும் ஊழிபெருநோய் என்று அழைக்கப்படும் காலரா போன்ற நோய்களை குணப்படுத்தும். நாள் பட்ட கழிச்சலை., வெண் திட்டுகள் மற்றும் இரத்த போக்கை குணப்படுத்தும். இது மட்டுமல்லாது இரத்த சோகை., கண் மற்றும் காதுகளில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்தும். 

விபத்துகள் ஏற்பட்டு எலும்புகள் உடைந்து விட்டால் முற்றிய வில்வக்காயை எடுத்து அதனுடன் சூரணித்த மஞ்சள் தூள் மற்றும் நெய் சேர்த்து பூசி வந்துள்ளார். இதில் இருக்கும் அமிலத்தன்மையின் காரணமாக குடலில் ஏற்படும் புண்கள் உடனடியாக குணமாகும். நுண்கிருமிகளை அழித்து நமது உடலை உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை பாதுகாக்கும். 

வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை பிரச்சனை., உடற்சோர்வு., உடல் அசதி., கை மற்றும் கால்களின் வலி மற்றும் வீக்கம்., ஈறுகளில் ஏற்படும் புண்கள் ஆகியவற்றை குணப்படுத்தி., உடலின் வைட்டமின் சி சத்துக்களை அதிகரிக்கும். இரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தை குறைத்து நமது உடலை பாதுகாக்கிறது. 

வில்வத்தில் இருந்து பெறப்படும் எண்ணெய்யை வைத்து ஆஸ்துமா., சுவாச கோளாறு., நுரையீரல் பிரச்சனை போன்றவற்றை குணப்படுத்தலாம். வில்வ எண்ணெய்யை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் சைனஸ் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதுமட்டுமல்லாது மலச்சிக்கலை சரிசெய்து நமது உடலை பாதுகாக்கிறது. 

English Summary

in temple vilva maram fruit have a more health for our body


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal