பெரிதாக ஒன்றும் செய்யாமல் உடல் குண்டாக வேண்டுமா?! இதோ அருமையான டிப்ஸ்.!                                  - Seithipunal
Seithipunal


ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தோற்றத்தை யாருமே விரும்பமாட்டார்கள். நாம் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரி அளவுக்கும், நம் உடல் உழைப்புக்கும் இடையே உள்ள அளவீட்டின்படி தான், நமது உடல் எடை அமைகிறது. இப்போது எப்படி உடல் எடையை அதிகரிப்பது என்று பார்ப்போம். 

தினசரி நாம் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரிக்க வேண்டும். எனவே தினமும் நாம் 500 கலோரிகள் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ரொம்ப ஒல்லியாக இருப்பவர்கள், தங்களது உடல் எடையை அதிகரிக்க வேண்டுமென்றால் ஐஸ்க்ரீம் சாப்பிடலாம். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சளி, ஜலதோஷம் போன்றப் பிரச்சனைகள் ஏற்படும்.

உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள்.

ஒரே நேரத்தில் முழு சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறைவாக சாப்பிடலாம். இதனால் உங்கள் உடல் எடை மாற்றத்தை உணர்வீர்கள்.

நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டால் இரண்டு மணி நேரம் கழித்து சாப்பாடு சாப்பிட வேண்டும். அப்போது தான் பசி எடுக்கும்.

இரவு 8 மணி நேரம் தூங்கவும். பகலில் நேரம் கிடைக்கும்போது தூங்குவது இன்னும் நல்லது.

உலர் பழங்கள், ஒரு கப் தயிர், அவித்த சோளம், ஜூஸ் இவற்றுள் ஏதேனும் ஒன்றை மதிய உணவுக்கு முன்னர் நண்பகலில் சாப்பிட வேண்டும்.

மதிய உணவுக்கு மூன்று கரண்டி சாதம், சாம்பார், தயிர், மிக மிகக் குறைவான எண்ணெயில் பொரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடையை அதிகரிக்கலாம்.

இனிப்பான பிரெட், சர்க்கரை இல்லாத மில்க்ஷேக், பால், முட்டை கலந்த ஃப்ரூட் சாலட் இவற்றுள் ஏதேனும் ஒன்றை மாலை வேளையில் உட்கொள்ளலாம்.

காலையிலும், மாலையிலும் பாலில் பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

தினமும் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர உடல் எடை அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How To weight in easy way tips


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->