ஆந்திராவில் அதிர்ச்சி! சொகுசுப் பேருந்து லாரியுடன் மோதல்...! பயணிகளுக்கு என்னானது...?
Shocking incident Andhra Pradesh luxury bus collides lorry What happened passengers
ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஐதராபாத் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் ஆம்னி சொகுசுப் பேருந்து, நந்தியால் மாவட்டம் ஸ்ரீவெல்லாமெட்டா அருகே பயங்கர விபத்தில் சிக்கியது.

அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்து, எதிரே வந்த லாரி மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது.மோதிய கணத்தில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.
இந்த கோர விபத்தில் பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிருடன் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிர்ச்சியில் உறைந்த பயணிகள், உயிர் காக்கும் போராட்டமாக பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து வெளியேறி தங்களை பாதுகாத்துக் கொண்டனர். தீப்பிடித்த பேருந்திலிருந்து கரும்புகை சூழ, சிலர் காயங்களுடன் தப்பினர்.
சம்பவ தகவல் கிடைத்ததும், மீட்பு படையினரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து தீயை அணைத்து, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கோர விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Shocking incident Andhra Pradesh luxury bus collides lorry What happened passengers