மருத்துவக் குணம் நிறைந்த வேப்பம் பூ ரசம் - வாங்க பார்க்கலாம்.!
how to make neem flower rasam
மருத்துவக் குணம் நிறைந்த வேப்பம் பூ ரசம் - வாங்க பார்க்கலாம்.!
மர வகைகளில் ஒன்று வேப்பமரம். இந்த மரத்தின் இலை, விதை, பூ என்று அனைத்தும் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த வேம்பில் புற்றுநோயை எதிர்க்கும் தன்மை, பாக்டீரியா தொற்றையும் எதிர்க்கிறது.
இப்படி பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள இந்த வேப்ப மரத்தில் உள்ள பூவை வைத்து பச்சடி, பொடி, ரசம், சூப் என்று பல்வேறு உணவுகள் தயாரிக்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த வேப்பம் பூவை வைத்து ரசம் செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் காணலாம். இந்த ரசம் வைப்பதற்கு தேவையான பொருட்கள்:-
காய்ந்த வேப்பம் பூ, புளி, மஞ்சள் தூள், வெல்லம், கொத்தமல்லித்தழை, நெய், உப்பு, எண்ணெய் அல்லது நெய், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், பருப்பு, கறிவேப்பிலை
செய்முறை:-
முதலில் புளியை ஊறவைத்து கரைத்து அதன் தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெயை சூடானதும், கடுகு போட்டு தாளித்து காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் என்று ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும்.
இதையடுத்து கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர், வெல்லம் தேவையான அளவு உப்பு என்று அனைத்தையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். ரசம் நன்றாக நுரை பொங்க கொதித்து வந்தவுடன் கொத்தமல்லித் தழையைத்தூவி அடுப்பை அணைக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து ஒரு சிறிய கடாயில், எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி சூடாக்கிக்கொள்ள வேண்டும். அதில் வேப்பம் பூக்களை வறுத்து ரசத்தில் சேர்க்க வேண்டும்.
English Summary
how to make neem flower rasam