உடலுக்கு வளத்தை சேர்க்கும் வெந்தய தேநீர் செய்வது எப்படி?.!!  - Seithipunal
Seithipunal


வெந்தயம் = வெந்த + அயம் 

அயம் என்பதற்கு இரும்பு என்பது பொருளாகும். நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்தை தன்னுள் அதிகளவு கொண்டுள்ளது வெந்தயம். எளிமையான முறையில் கிடைக்கும் இந்த பொருளை ஏனோ நாம் கண்டுகொள்வதில்லை. 

வெந்தயத்தில் இருக்கும் இரும்பு சத்து., நார்சத்து., புரதசத்து மற்றும் பிற சத்துக்களின் காரணமாக நமது உடல் நலமானது மேம்படுகிறது. வெந்தயத்தில் இருக்கும் மினரல் மற்றும் பொட்டாசியத்தின் காரணமாக இருதய பிரச்சனைகளில் இருந்து நாம் விரைவில் விடுபட இயலும். 

இதன் மூலமாக நமது உடலில் ஏற்படும் சர்க்கரை வியாதி., உடற்பருமன்., பித்தம் சம்பந்தமான நோய்கள்., இரத்த அழுத்த பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளில் இருந்து தீர்வை அளிக்கிறது. 

வெந்தய தேநீரை தயாரிக்க தேவையான பொருட்கள்:

வெந்தயம் - சிறிதளவு., 
தேன் - ஒரு தே.கரண்டி., 

வெந்தய தேநீர் செய்முறை: 

முதலில் எடுத்து கொண்ட வெந்தயத்தை நீர் ஊற்றி சுமார் மூன்று நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். 

பின்னர் வெந்தய நீரை இறக்கி விட்டு., அதனை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். 

வெதுவெதுப்பாக வெந்தய நீர் இருக்கும் பட்சத்தில்., சிறிதளவு தேனை சேர்த்து குடிக்க வேண்டும்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how to make Fenugreek tea in home


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->