இளவயது ஆண், பெண் இருவரும் இயற்கையான முறையை பின்பற்றி எவ்வாறு அழகு முக அழகை பெறலாம்?! - Seithipunal
Seithipunal


பொதுவாகவே அழகான தோற்றத்தை பெற வேண்டுமென ஆண், பெண் என இருவருமே விருப்பம் கொள்வது இயல்பானது. அதிலும், டீன் வயது காரர்களுக்கு கேட்கவே வேண்டாம். எப்பொழுதும் சீப்பும் கையுமாக ஆண்களும், ஹேண்ட்பேக்கில் சிறு கண்ணாடி இல்லாமல் பெண்களும் இருக்கவே மாட்டார்கள். 

இப்பொழுதெல்லாம் ஸ்மார்ட்போன்களிலேயே கண்ணாடிக்கு என்று ஆப்கள் வந்துவிட்டன. 90 ஸ் பிறந்த அனைவருக்கும் இதுபற்றி தெரியும். பள்ளி பருவமே என்றாலும், மேக்கப்பிற்கு எடுத்து கொள்ளும் சிரத்தை பற்றி கூற இன்று ஒரு நாள் மட்டும் போதாது. 

தற்பொழுது இயற்கை பொருட்களை பயன்படுத்தி அழகை பெறுவது எப்படி என பார்க்கலாம். 

முகம் பொலிவு பெற: 

அழகு கூடும்: அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் அழகு கூடும்.

உடல் பளபளப்பாக: தினமும் பாலில் தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய்களையும் எதிர்த்து முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் மாறும்.

முகச் சுருக்கங்கள் மறைய: தேங்காய் எண்ணையில் மஞ்சத்தூளை போட்டுக் குலைத்து உடம்பிற்கு தடவி. பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாறும். மேலும், முகச் சுருக்கங்கள் மறையும்.

முகச்சுருக்கம் நீங்க: தினமும் முகத்தில் ஆலிவ் எண்ணெய் பூசி வந்த முகம் பளபளப்பாக வைத்து கொள்ளம்.

முகம் பளபளப்பாகவும், இளமையாக இருக்க: ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். 

தோலின் நிறம் பொலிவு  பெற: உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவினால் தோலின் நிறம் மாறும்.

சருமம் அழகாகவும், பளபளப்பாக இருக்க: பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளிக்கவேண்டும்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make beauty using natural things


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal