காரமான உணவை சாப்பிடீர்களா.. அப்போ அடுத்து கண்டிப்பா 'இதை' சாப்பிடுங்க..!! - Seithipunal
Seithipunal



நாம் உண்ணும் உணவில் இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு என்று அறுசுவைகள் அடங்கியுள்ளன. நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை உணவுகள் பிடிக்கும். அந்த வகையில் சிலருக்கு காரமான உணவுகள் பிடிக்கும். 

அப்படி காரமான உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும் போது நமது நாக்கும், வாயும் சில நேரங்களில் புண்ணாகி விட வாய்ப்புண்டு. மேலும் நீண்ட நேரம் எரிச்சலாகவும் இருக்கும். எனவே காரமாக சாப்பிடும்போது ஏற்படும் எரிச்சலை சில வீட்டுப் பொருட்கள் மூலம் எப்படி சரி செய்வது என்று இங்கு பார்ப்போம்.

காரமான உணவு உண்ட பிறகு பால் அல்லது பால் பொருட்களான தயிர், பாலாடைக்கட்டி, க்ரீம் போன்ற பொருட்களை உட்கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் பொருட்களில் இருக்கும் கேசின் என்னும் புரதம், வாய் மற்றும் நாக்கு எரிச்சலை மட்டுப் படுத்தும். 

மேலும் பால் பிடிக்காதவர்கள் காரமான உணவு உண்டால், ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி போன்ற அமிலத் தன்மை கொண்ட ஏதேனும் ஒரு பானத்தை அருந்தலாம். காரமான உணவுக்குப் பிறகு ஏதேனும் ஒரு மெல்லிய ரொட்டி, காரமில்லாமல் வேக வைத்த உருளைக் கிழங்கு, அல்லது வேறு அரிசி சோறு போன்ற கார்போஹைட்ரேட் உணவை எடுத்துக் கொள்ளலாம். 

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக எப்போதும் நம் வீட்டில் இருக்கும் சர்க்கரை அல்லது தேன் ஆகிய இரண்டில் ஏதோ ஒன்றை காரமான உணவுக்குப் பிறகு எடுத்துக் கொண்டால், நாக்கில் ஏற்படும் எரிச்சல் மட்டுப்படும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How to Cool Down Your Tongue After Eating Spicy Food


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->