மன அழுத்தம் உங்களை எப்படி பாதிக்கிறது? காரணங்கள், நோய் எச்சரிக்கைகள், உடற்பயிற்சி டிப்ஸ்...! - Seithipunal
Seithipunal


மன அழுத்தத்தால் ஏற்படும் விளைவுகளால் பாதிக்கும் காரணிகள்:
ஒரு நபரின் மன அழுத்தம் தங்கும் திறன் கீழ்கண்ட ஒன்று அல்லது பலவித காரணிகளால் ஏற்படுமாதலால், நபருக்கு நபர் இத்திறன் வேறுபடுகிறது.
ஒரு நபரின் மன அழுத்தம் தாங்கும் திறன் காலகட்டங்களுக்கு தகுந்தவாறும் மாறுபடலாம்.
குழந்தைபருவ அனுபவங்கள் (கொடுமைகளால் அழுத்தம் தாங்கும் திறன் பாதிக்கப்படலாம்).
நபர்களின் செயல்முறைகள் (சிலர் மற்றவரை விட அதிகம் பாதிக்கப்படலாம்).
பரம்பரை (பரம்பரையாக வரும், குறிப்பாக மூளையின் முக்கிய இரசாயனமான செரட்டினின் அளவோடு தொடர்புடைய தாமத செயல்பாடு போன்றவை).
நோய் எதிர்ப்புத்திறனில் வேறுபடுகள் (மூட்டு வலி, சொறி போன்ற குறைபாடுகளால் தாங்குதிறன் குறைகிறது).


வாழ்க்கைமுறை (சத்தில்லாத உணவு மற்றும் உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறைகள்).
மன அழுத்தம் ஏற்படுத்தும் காரணிகள் தோன்றும் கால அளவு.
நோயை எவ்வாறு கண்டறிவது ?
மனவியல் நோய்களை தீர்க்கும் திட்டமுடிதலுக்கு, அந்நோய்களைப் பற்றிய முழு புரிதலும் கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஒரு நபரின் மன அழுத்த நிலையை, அட்ரீனல் சுரப்பி சுரக்கும் இரண்டு இரசாயனங்களான கார்டிசால் (cortisol) மற்றும் DHEA (dehydroepiandrosterone) ஆகியவற்றை அளப்பதன் மூலம் அறியலாம்.
உடற்பயிற்சிகள்
தியானம், யோகா போன்றவற்றில் மனதை டுபடுத்த வேண்டும்.
ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் ஒன்று.
மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன.
அமைதியான குடும்பச் சு ழல் பெரும் பாலான மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
அலுவலகத்தின் குழப்பங்களையோ, எரிச்சல்களையோ குவிக்கும் இடமாக குடும்பம் இருக்கக் கூடாது, மாறாக அவற்றை அழிக்கும் இடமாகவே குடும்பம் இருக்க வேண்டும் என்பதனை குடும்பத்தினர் புரிந்து கொள்ள வேண்டும்.
குடும்பத்தில் நுழைந்தவுடன் மனம் மகிழ்ச்சியடையும் வகையில் குடும்பத்தினரோடு அன்பான வாழ்க்கை வாழ்தல் மிகவும் முக்கியம்.
புருவங்களின் மத்தியில் அழுத்தம் தரலாம்.
பின் கழுத்தில் அழுத்தம் தரலாம்.
நடைப்பயிற்சி நலம் தரும்.
கழுத்துச் சரிவுக்கும் தோள்பட்டைக்கும் மத்தியில் அழுத்தம் தரலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How does stress affect you Causes disease warnings exercise tips


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->