மருத்துவ பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


ஆயுஷ் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களை காலம் தாழ்த்தாமல் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் அரசு மருத்துவத்துறையின் கீழ் நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்களை, செயல்பாடுகளை அவ்வப்போதே செய்து முடிப்பது தான் தமிழக அரசின் கடமை.

காரணம் பொது மக்களுக்கான மருத்துவச் சேவையானது அதுவும் அரசு மருத்துவமனைகளின் மூலம் மேற்கொள்ளும் பணியானது மக்கள் நல்வாழ்வுக்கு உகந்தது. 

குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் கடந்த பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 

அரசு மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் மிகவும் அவசியமான பணியில் ஈடுபடுபவர்கள். அவர்களை தமிழக அரசு, பணிநிரந்தரம் செய்திருக்க வேண்டும். 

ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வருகின்ற செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யாமல் இருப்பதால் அவர்கள் சிரமத்தில் இருக்கிறார்கள். 

ஏற்கனவே தமிழ்நாடு அரசு மருத்துவ  சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட சுமார் 12 ஆயிரம் செவிலியர்களில் சுமார் 3,200 பேரை பணிநிரந்தரம் செய்த நிலையில் மீதமுள்ள சுமார் 7,800 செவிலியர்களை காலம் தாழ்த்தாமல் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

மேலும் ஊரக நலத்திட்டத்தின் கீழ் பணி அமர்த்தப்பட்ட ஆயுஷ் மருத்துவர்கள், சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவ அலுவலர்கள் கடந்த 13 ஆண்டுகளாக பணிநிரந்தரம் செய்யப்படாமல்  பணிபுரிகின்றனர். 

இவர்களுக்கு நாள் அடிப்படையில் ஊதியம் வழங்கி வந்தாலும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

இவர்களுக்கு கடந்த மே மாதம் ஊதியம் சற்று உயர்த்தி வழங்கப்பட்டாலும் அது அவர்களுக்கு பொதுமானதாக இல்லை. இவர்களை பணிநிரந்தரம் செய்து அவர்களின் வாழ்வாதாரம் உயர வழி வகுக்க வேண்டும்.

எனவே அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் ஆயுஷ் மருத்துவர்கள், சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் ஆகியோரை தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Vasan Statement on health department staffs


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->