நல்லெண்ணெய்க்கு சும்மாவெல்லாம் பேரு வைக்கல.. இதோ ஏகப்பட்ட நன்மைகள்.!
gingelly oil benefits for all problems
நல்லெண்ணெய் பேருக்கு ஏற்றவாறு நிறைய நற்பண்புகளை கொண்டுள்ளது. அதில் புரோட்டின் குறைந்த அளவு தான் இருக்கிறது . மற்ற எண்ணெய்களுடன் ஒப்பிடும் போது நல்லெண்ணையில் புரதச்சத்து அதிகமாக தான் இருக்கிறது.
சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஒரு சத்தான உணவு என்றால் அது நல்லெண்ணெய் தான். இந்த நல்லெண்ணையை உச்சந்தலையில் அடிக்கடி தேய்த்து குளித்து வந்தால் முடி அடர்த்தியாக வளர உதவும். 
மூட்டு வலி, பல் வலி உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் நல்லெண்ணெய் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியத்திற்கு வழிவகை செய்யும். அத்துடன் இளநரை பிரச்சனைகளையும், இந்த நல்லெண்ணெய் தீர்க்கும்.
உச்சந்தலையில் நல்லெண்ணெய் வைத்து மசாஜ் செய்து வந்தால் இளநரையை தடுக்கலாம். இது தலை முடியை கருமையாக்கும் பண்புகளை கொண்டுள்ளது. நல்லெண்ணெய் சமையலுக்கு மட்டும் நல்லது என்று தான் அனைவருக்கும் தெரியும்.

ஆனால், அதை தாண்டி நல்லெண்ணெய் உடலில் குளிர்ச்சி தன்மையை அதிகரிக்கும். எனவே இதனை ஆயுர்வேதத்தில் மசாஜ் செய்ய பயன்படுத்துவார்கள். நல்லெண்ணெய் வைத்து மசாஜ் செய்து குளித்து வருவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
English Summary
gingelly oil benefits for all problems