#எச்சரிக்கை.. சரக்கு அடிக்கும் போது.. இத பண்ணீங்கன்னா.. சங்கு தான்.! - Seithipunal
Seithipunal


மது பிரியர்கள் பலரும் மது அருந்தும் போது சில உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி விரும்பி சாப்பிடும் பல உணவுகளை மது அருந்தும் போது சாப்பிட்டால் ஆபத்து என்பது தெரியுமா.? தெரிந்து கொள்ளலாம் வாங்க.!

ரொட்டி மற்றும் பீர் இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவது உடலுக்கு கேடு தரும். பீர் குடிப்பது உடலில் நீர் சட்டை குறைக்கிறது. ரொட்டியில் அதிகமாக ஈஸ்ட் இருப்பதால் இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால் கல்லீரலால் சரிவர செயல்பட முடியாமல் அது செயல் இழக்கத் துவங்கும். இதனால் நாளடைவில் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். 

மேலும் இந்த கலவை உடலில் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி செரிமான மண்டலத்தை வீக்கம் அடைய வைக்கலாம். 

ஆல்கஹால் எடுத்துக் கொள்ளும்போது சாக்லேட் சாப்பிடுவது ரப்பை குடல் பிரச்சினைகளை தூண்டும். சாக்லேட்டில் கோகோ மற்றும் காப்பின் இருக்கின்றது. இது வயிற்றில் பசியை தூண்டும். இதனால் வயிறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். 

மது அருந்தும் போது பலரும் விருப்பப்பட்டு சாப்பிடக்கூடிய உணவுகளில் ஒன்றுதான் பீட்சா. ஆனால் இந்த பீட்சாவை மதுவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது ஜீரணம் ஆகாமல் வயிற்று வலி மற்றும் அசௌகரியம் ஏற்படும். இது உடல் எடையை அதிகரிப்பதுடன் இதய நோய் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் உள்ளிட்டவற்றில் இரும்பு சத்து அதிகமாக காணப்படுகிறது. இவற்றை மது அருந்தும் போது எடுத்துக் கொள்வதால் ஆல்கஹால் கடினமாக கூடும். எனவே உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அபாயம் இருக்கிறது. 

மது அருந்தும் போது ஹாட் சிப்ஸ், பிரெஞ்சு ப்ரைஸ், பக்கோடா மற்றும் உப்பு அதிகமாக இருக்கும் உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படக்கூடும். காரமான மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை எடுத்துக் கொள்வதால் சிறுநீரகம் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறது. மேலும் பாலாடை, தயிர், மோர் போன்றவற்றையும் மது அருந்தும் போது தவிர்க்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Donot Eat these items during drinking alcor


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?




Seithipunal
-->