இந்த அறிகுறிகள் இருக்கிறதா? நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள் – கவனிக்க வேண்டிய 5 முக்கிய அறிகுறிகள்!
Do you have these symptoms Lung Cancer Symptoms 5 Important Signs to Watch Out For
நுரையீரல் புற்றுநோய், ஆரம்பத்தில் பொதுவான சுவாசநலம் பிரச்சனைகள் போல தோன்றுவதால் தாமதமாக கண்டறியப்படுகிறது. பொதுவாக ஆஸ்துமா, சுவாசக்குழாய் அழற்சி அல்லது சாதாரண சளி என நினைத்து அலட்சியம் செய்யும் அறிகுறிகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்:
1. 3 வாரத்திற்கு மேல் தொடர்ச்சியாக இருமல்
சாதாரண சளி அல்லது ஒவ்வாமைக்கு சிகிச்சை எடுத்தும் இருமல் இல்லாமல் தொடர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
புற்றுநோய் கட்டிகள் நுரையீரலில் எரிச்சலை உருவாக்குவதால் இருமல் ஏற்படும்.
2. திடீரென எடை குறைதல் மற்றும் தொடர்ந்து சோர்வு
உணவுப் பழக்கத்தால் அல்லது மன அழுத்தத்தால் அல்லாமல், உடல் அதிக ஆற்றலை புற்றுநோய் போராட்டத்திற்கு செலவிடும் காரணமாக எடை குறையும்.
அன்றாட வேலைகளிலும் சோர்வு, பலவீனம் அனுபவிக்கப்படும்.
3. மூச்சுத் திணறல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம்
சாதாரண செயலை செய்தும் சுவாசிப்பதில் சிரமம், மூச்சுத் திணறல் இருந்தால் கவனிக்க வேண்டும்.
இது நுரையீரல் புற்றுநோய் மற்றும் சுவாசப்பாதை பிரச்சனைகளின் அறிகுறி.
4. தொடர்ச்சியான தோள்பட்டை வலி
நுரையீரல் கட்டிகள் மார்பு மற்றும் தோள்பட்டையில் வலியை ஏற்படுத்தும்.
சிரிப்பது, இருமல் கூட வலி உண்டாகும்.
5. கரகரப்பான குரல் அல்லது குரல் மாற்றங்கள்
தொண்டை தொற்று அல்லது சளி இல்லாமல் குரல் மாற்றம் இருந்தால் கவனம் தேவை.
நுரையீரலில் புற்றுநோய் நரம்பு பாதைகளை சேதப்படுத்துவதால் நிரந்தர குரல் மாற்றங்கள் ஏற்படலாம்.
குறிப்பு:இந்த அறிகுறிகளை கவனமாக பரிசீலித்து, நீண்ட காலம் தொடர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள். ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால், சிகிச்சை சிறப்பாக நடைபெறும் வாய்ப்பு அதிகம்.
English Summary
Do you have these symptoms Lung Cancer Symptoms 5 Important Signs to Watch Out For