உங்களுக்கு கருப்பு நீர்க்கட்டியா...? வீட்டிலேயே செய்யும் எளிய மற்றும் ஆச்சர்யகரமான மருத்துவம்...!
Do you have OVARIAN cyst Simple and amazing home remedy
கருப்பை நீர்க்கட்டிக்கு எளிய மருத்துவம் :
சூடான தண்ணீரை தோல் பை அல்லது ரப்பர் பையில் நிரப்பி, வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.
மலச்சிக்கல் இருந்தால், சீரகம் போட்டுக் காய்ச்சிய வெதுவெதுப்பான நீரைப் பருகவும். சீரான இடைவெளியில் வெந்நீரை அருந்தவும். எளிதில் செரிக்கும் புழுங்கலரிசிக் கஞ்சியைக் காலையில் 2 டம்ளர் அளவு குடிக்கவும்.

உருளைக் கிழங்கு, வாழைக்காய் போன்ற வாயுப் பண்டங்களை எண்ணெய்யில் வறுத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
பருவ காலங்களுக்குத் தக்கபடி கிடைக்கும் பழங்களை அன்றாடம் சாப்பிடவும். உடல்சோர்வு தரும் செயல்களை மாதவிடாய் நாட்களில் செய்வதைத் தவிர்க்கவும்.
மதிய உணவும், இரவு உணவும் எளிதில் செரிக்கும் வகையில் அமைத்துக் கொள்ளவும். அதாவது மிளகு ரசம், கறிவேப்பிலைத் துவையல், கடைந்து வெண்ணெய் நீக்கிய மோர், நார்த்தங்காய் வற்றல் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
English Summary
Do you have OVARIAN cyst Simple and amazing home remedy