சைனஸ் மற்றும் அலர்ஜி பிரச்சனையில் இருந்து விடுபட இதை செய்யுங்கள்! - Seithipunal
Seithipunal


  சைனஸ் மற்றும் அலர்ஜி பிரச்சனையைப் போக்க உதவும் ஆயுர்வேத வைத்தியம் பற்றி தற்போது இந்த பகுதியில் பார்க்கலாம்.

வீட்டிலேயே சில ஆயுர்வேத பொருட்களைக் கொண்டு சைனஸ் மற்றும் அலர்ஜி தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்கலாம். அரை டீஸ்பூன் அளவு துருவிய இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு சிட்டிகை கருப்பு மிளகு மற்றும் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இதில் ஒரு டீஸ்பூன் தேன் கலக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட கலவையில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன, இந்த பண்புகள் சைனஸ் மற்றும் தொண்டையில் சிக்கியுள்ள சளியை அகற்ற உதவுகிறது.

 காலையில் வெறும் வயிற்றில் இதை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். பிறகு இரவு தூங்கும் முன் எடுத்துக் கொள்ளலாம்

சூடான நீரில் ஆவி பிடி:

சூடான நீரில் யூகலிப்டஸ் எண்ணெயை சில துளிகள் கலந்து ஆவி பிடிப்பதால் சைனஸ் மற்றும் அலர்ஜி பிரச்சனைகள் குறையும். 

வெந்தயக் கஷாயம்:

வெந்தயக் கஷாயத்தை குடித்தால் சைனஸ் தொந்தரவு குறையும். 

மஞ்சள் தூள்:

மஞ்சளை பாலில் கலந்து குடித்தால் சைனஸ் பிரச்சனைகள் குறையும்.

புதினா:

புதினா சாற்றை மூக்கினுள் சொட்டுவதால் சைனஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். 

வெள்ளரி:

வெள்ளரி சாற்றை குடித்தால் சைனஸ் பிரச்சனைகள் குறையும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do this to get rid of sinus and allergy problems


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->