டிஜே சத்தம் உயிருக்கு ஆபத்து..,! நடனமாடும் போது ஏற்படும் திடீர் மரணங்கள்...! - Seithipunal
Seithipunal


திருமண விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளில் டி.ஜே. இசையுடன் நடனம் என்பது, ஒரு புதிய கலாச்சாரமாக இருக்கிறது. ஆனால், அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்பி நடனமாடும் போது சிலர் திடீர் மயங்கி இறந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன.இதில் கடந்த சில வாரங்களில் மாமல்லபுரத்தில் ஒரு பெண் நடனம் ஆடியபோது திடீரென இறந்தார்;

இதேபோல், நாடு முழுவதும் பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.இதுகுறித்து ஜெர்மனியின் மெய்ன்ஸ் பல்கலைக்கழக மருத்துவ மையம் 15,000 பேரில் ஆய்வு நடத்தி, அதிக ஒலிபெருக்கி மற்றும் டி.ஜே. ஒலிகள் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதை கண்டறிந்தது.

இதன் விளைவாக மாரடைப்பு, மூளை பக்கவாதம் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு அபாயம் அதிகரிக்கலாம் என்றும், 100 டெசிபலுக்கு மேல் ஒலிகள் கேட்களை பாதிக்கவும், சிறுவர்கள் நிரந்தர கேளாமை அடையவும் சாத்தியமுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.மேலும், டி.ஜே. சத்தங்கள் சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

அண்மையில், தெலுங்கானாவில் டி.ஜே. சத்தம் காரணமாக 100க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்ததாகப் பதிவு செய்யப்பட்டது. இந்த அதிர்வு விளைவால் பலவீனமான கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயமும் இருக்கிறது.இதற்கு தீர்வாக பாதுகாப்புக்காக, டி.ஜே. இடங்களில் ஹெட்போன், நுரையால் ஆன சாதனங்களை பயன்படுத்தி சத்தத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், 30 டெசிபல் வரை குறைக்கும் வகையில் ஹெட்போன்கள் மற்றும் காது செருகிகள் கிடைக்கின்றன. அதைஉபயோகித்து டி.ஜே. ஒலிபரப்பும் இடங்களில் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DJ noise is dangerous to life Sudden deaths while dancing


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->